திரிஷா கல்யாணம் நின்றதற்கு காரணம் இது தான் என்று திரிஷாவின் அம்மா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் திரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார். அதன் பின் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், இவர் கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார்.
அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், இவர் சமீப காலமாகவே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு திரிஷா அவர்கள் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகியிருந்த பொன்னியின் செல்வன் 1 படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் திரிஷாவிற்கு இன்னும் ரசிகர் கூட்டம் உருவானது என்று சொல்லலாம். மேலும், இந்த படத்தின் இரண்டாம் பாகமும் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது.
திரிஷா திரைப்பயணம்:
இதனை அடுத்து சமீபத்தில் வெளியாகி இருந்த ராங்கி என்ற திரைப்படத்தில் திரிஷா நடித்திருந்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. தற்போது திரிஷா அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷா, விஜய் உடன் படத்தில் இணைந்து நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் திரிஷாவின் திருமணம் குறித்து பலரும் கேள்வி கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
திரிஷா திருமணம்:
அதிலும், திரிஷா- வருண் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் வரை சென்று சில காரணங்களால் நின்று போனது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்து இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து த்ரிஷாவின் அம்மா கூறியிருப்பது, திரிஷாவின் கல்யாணம் சம்பந்தமா அவங்க அவங்க மனதிற்கு என்னெல்லாம் தோணுதோ அதை இஷ்டத்துக்கு எழுதிக் கொண்டு வருகிறார்கள். இது ஒரு சென்சிட்டிவான விஷயம். அதனால்தான் இதுவரைக்கும் வாய் திறக்காமல் இருந்தேன். பத்திரிகையில் எல்லாம் திரிஷா திருமணத்துக்கு பிறகு நடிக்கிறது வருணுக்கும் அவரது குடும்பத்துக்கும் பிடிக்கவில்லை. அதனால் கல்யாணத்தை நிறுத்திவிட்டார்கள் என்று தங்களுக்கு என்ன தோன்றியதோ அதையெல்லாம் எழுதுகிறார்கள். ஆனால், அதில் துளி கூட உண்மை இல்லை.
திரிஷா அம்மா அளித்த பேட்டி:
திரிஷா சினிமாவில் நடிக்கிறார் என்று தெரிந்து தான் பெண் பார்க்க வந்தார்கள். பின் எல்லாம் தெரிந்து தானே நிச்சயம் செய்தார்கள். கல்யாணத்துக்கு பிறகும் நடிக்கலாம் என்று திரிஷாவை வருண் என்கரேஜ் செய்து கொண்டிருந்தார். அதுதான் உண்மை. அது மட்டும் இல்லாமல் திரிஷா சினிமாவில் நடிக்கிறது அவங்க குடும்பத்தோட பெருமையாக தான் நினைத்தார்கள். நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகு கூட நிறைய புது படங்களுக்கு திரிஷா தேதி கொடுத்து இருந்தது வருண் ஃபேமிலிக்கு நன்றாகவே தெரியும். கல்யாணத்துக்கு பிறகு திரிஷா நடிக்க கூடாது என்று வருண் குடும்பத்தினர் சொல்லி இருந்தார்கள் என்றால் நாங்க புது படத்தை கமிட் செய்து இருக்க மாட்டோம்.
திரிஷா திருமணம் குறித்து சொன்னது:
திரிஷா கல்யாணம் நின்று போன விஷயத்தில் பெரியவங்க பல பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இன்னும் நிறைய பேர் இன்வால்வாகி இருக்கிறார்கள். அவர்கள் எல்லோர் மேலயும் எனக்கு நல்ல மரியாதை இருக்கு. அதனால் எல்லாத்தையும் வாய் திறந்து பேச முடியாது, பேசுவது நாகரிகமும் இல்லை. நாங்கள் ஏதாவது வாய் திறந்து பேச போய் அதை பற்றி வேற மாதிரி எழுதி விடுகிறார்கள். அதனால் தான் அந்த பெரியவங்களோட மனசு காயப்படுத்துறதுக்கு நாங்க காரணமாக இருக்க விரும்பவில்லை. ஒத்து வராத விஷயங்களை காம்ப்ரமைஸ் பண்ணிக்கொண்டு வாழுறது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. சில விஷயங்கள் சரிப்பட்டு வரலை என்றால் பிரிந்து விடுவது தான் பெட்டர். அதுக்கான காரியங்களை ஆராய்ந்து பார்த்துக் கொண்டே இருந்தால் மன குழப்பம் தான் வரும். இப்ப திரிஷாவோட கவனம் எல்லாம் புதுசா தேதி கொடுக்குற படங்களில் மேல தான் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.