பிரபல கட்சியில் இணைய இருக்கும் திரிஷா ? ஆளுங்கட்சியை விட்டுட்டு இந்த கட்சியில் போய் சேர்ராரே.

0
303
trisha
- Advertisement -

தமிழ் சினிமாவில் இருந்து எத்தனையோ நடிகர் நடிகைகள் அரசியலில் களம்கண்டு இருக்கின்றனர். குஷ்பூ, நமீதா, நக்மா என்று பல பிரபலமான நடிகைகள் அரசியலில் குதித்து இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது அரசியலில் பிரபல நடிகை திரிஷா களமிறங்க இருக்கிறார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார்.

-விளம்பரம்-

பின் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.மேலும், நடிகை திரிஷா அவர்கள் சமீப காலமாகவே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

- Advertisement -

தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால், நயன்தாரா அளவிற்கு லீட் கதாபாத்திரங்கள் இவருக்கு கைகொடுக்கவில்லை. இருப்பினும் நயன்தாராவிற்கு இணையாக தமிழ் திரையுலகில் இன்றும் ஒரு அந்தஸ்துடன் இருந்து வருகிறார் திரிஷா.சமீபத்தில் தான் நடிகை திரிஷா தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். ஆனால், தற்போது அதே அழகுடன் ஜொலித்து வருகிறார்.

விஜய், அஜித், ரஜினி, கமல், விக்ரம், தனுஷ், சிம்பு என்று இன்றைய தலைமுறையின் திரிஷா நடித்து இருந்தாலும் சமீப வருடங்களாக திரிஷாவின் திரை வாழ்க்கை கொஞ்சம் சறுக்களில் தான் இருந்து வருகிறது. இறுதியாக இவர் நடித்த 96 திரைப்படம் தான் இவருக்கு ஒரு கம் பேக்கை கொடுத்தது என்றே சொல்லாமல். தற்போது இவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து திரிஷா பல படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் திரிஷா, காங்கிரஸ் கட்சியில் இனைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இறுகிறது. தமிழ் சினிமாவில் இருக்கும் பெரும்பாலான பிரபலங்கள் ஆளும் கட்சியான பா ஜ கவில் தான் அதிகம் இருக்கின்றனர். ஆனால், திரிஷா மட்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement