கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் 35 வயது நடிகை.! சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

0
578
Karthik-subburaj-rajini
- Advertisement -

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில், நடிகர் ரஜினிகாந்த்துடன் த்ரிஷா நடிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

-விளம்பரம்-

- Advertisement -

‘காலா’, ‘2.0’, படங்களுக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில், டார்ஜிலிங்கில் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. பெயரிடப்படாத இந்தப் படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. ரஜினிக்கு ஜோடி யார் என்பதுகுறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா முதன்முறையாக நடிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது சன் பிக்சர்ஸ். அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த த்ரிஷா, இதுவரை ரஜினியுடன் நடிக்கவில்லை. முன்னணி நடிகையாக இருந்துவந்த அவரின் கனவு, இந்தப் படத்தின்மூலம் நனவாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ், ரஜினி, த்ரிஷா காம்போ, ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement