அடுத்த ப்ரோமோஷனுக்கு வர்லனா, பாதி சம்பளம்- தயாரிப்பாளர் சங்கம் சார்பாக அறிவித்த தயாரிப்பாளர்.

0
2087
TriishaNayan
- Advertisement -

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் அஜித் தான் பொது நிகழ்ச்சிகளிலும் தனது படத்தின் பிரமோஷனில் கலந்து கொள்வதை எப்போதும் நிறுத்திவிட்டார் தற்போது நடிகைகளில் நயன்தாரா அதே ரூட்டை பின்பற்றி வருகிறார் இந்த நிலையில் நடிகை திரிஷாவும் தற்போது புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கு பெறாமல் இருந்ததால் தயாரிப்பாளர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்தற்போது இயக்குனர் திருஞானம் இயக்கத்தில் திரிஷா நடித்து உள்ள படம் “பரமபதம் விளையாட்டு”. இந்த படத்தில் நந்தா, ரிச்சர்ட், வேல ராமமூர்த்தி, ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் ப்ரெஸ் மீட் ஒன்று நடைபெற்றது.

-விளம்பரம்-
Image result for trisha paramapadham vilayattu

- Advertisement -

இந்த விழாவில் பேசிய மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நடிகைகள் ஏன் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர மறுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. பெரிய பெரிய நடிகர்களான ரஜினி, விஜய் போன்றவர்கள் வரும்போது நீங்கள் ஏன் வர மாட்டீர்கள். இந்த இடத்திற்கு கொண்டு சென்று புகழை ஏற்படுத்திக் கொடுத்தது ரசிகர்களும் பத்திரிக்கை நண்பர்கள் தான். ஆனால் அவர்களை சந்திப்பதற்கு உங்களுக்கு என்ன பிரச்சனை எதற்கு தயாரிப்பாளர்கள் பிரபலமான நடிகைகளை தேர்வு செய்கிறார்கள். உங்களுக்கு என்று ஒரு கூட்டம் இருக்கிறது, அதே போல பத்திரிக்கையாளர்களும் சாதாரண நடிகர்களை பற்றி செய்தியாக்க மாட்டார்கள்.

இதையும் பாருங்க : எல்லா எடத்தலையும் கேள்வி கேட்டு அவமானமா இருக்கு. வீடீயோவை பகிர்ந்து புலம்பிய மணிமேகலை.

-விளம்பரம்-

அதுவே நீங்கள் வந்தால் கண்டிப்பாக அது செய்தியாக மாறும் இத்தனை பணம் போட்டு புரமோஷன் செய்கிறார்கள் அதில் கலந்து கொள்ள வேண்டுமென்று ஒரு குறைந்தபட்ச பொறுப்பு கூடவா உங்களுக்கு கிடையாது உங்களுக்கு என்ன தயாரிப்பாளர்கள் சம்பளமும் கொடுக்காமல் போய்விடுகிறார்கள் என்று பேசிய சுரேஷ் காமாட்சி இறுதியாக அடுத்த முறையாவது புரமோஷனுக்கு வரும் நடிகைகளை தேர்வு செய்து படத்தில் போடுங்கள் என்று கூறி இருந்தார். சுரேஷ் காமாட்சியை தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் சிவா, ஒரு பெரிய நடிகரின் படம் என்றால் அதில் நடிகைகள் புரமோஷனுக்கு வரவில்லை என்றாலும் கூட அந்த பெரிய நடிகரை வைத்து புரமோஷன் நிகழ்ச்சியை முடித்து விடலாம்.

ஆனால், இதுபோன்ற ஒரு படத்திற்கு புரோமோஷன் செய்ய வேறு எந்த ஒரு பெரிய நடிகரும் கிடையாது. இதனால் நீங்கள் பிரமோஷனில் வந்தால் இது அவர்களின் வாழ்விற்கும் ஒரு நல்ல பாதையை ஏற்படுத்திக் கொடுக்கும். தற்போது வேண்டுமானால் இந்த படத்தின் கதாநாயகி புரமோஷனுக்கு வராமல் இருந்திருக்கலாம். ஆனால், அடுத்த புரமோஷனுக்கு அவர் வரவில்லை என்றால் அவர் வாங்கிய சம்பளத்தில் ஒரு பகுதியை திருப்பி கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை தயாரிப்பாளர்களின் சங்கம் சார்பாக நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement