இந்த அக்கா பாட்ட கிண்டல் பண்ணிட்டிருந்தோம், ஆனா ? இந்த ரெண்டு பேமஸ் தமிழ் பாட்ட பாடுனது இவங்கனு தெரியுமா ?

0
1601
nooran

சமூக வளைத்தைலத்தில் திடீரென்று பல பேர் பிரபலமடைந்துவிடுகின்றனர். அதிலும் ட்ரோல் மற்றும் மீம்ஸ் மூலம் பலர் பிரபலமாகி இருக்கின்றனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைத்தகளத்தில் படு ட்ரோல்களுக்கு ஆளானவர் பிரபல பாடகி ஜோடிகளான நூரன் சகோதரிகள். மேடை நிகழ்ச்சி ஒன்றில் இவர்கள் பாடிய பாடல் பல மீம் கிரியேட்டர்களால் பெரிதும் ட்ரோல் செய்யப்பட்டது. அவ்வளவு ஏன் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் கூட இதை பற்றி பதிவு ஒன்றை பகிர்ந்து இருந்தார்.

உண்மையில் யார் இவர்கள்வ ? இந்த அளவிற்கு ட்ரோல் செய்யும் அளவு இவர்கள் மோசமான பாடகர்களா ? உண்மையில் அப்படி கிடையாது. இவர்கள் வட இந்தியாவில் மிகவும் பிரபலமான பாடகர்கள் தான். இவர்களின் தந்தை உஸ்தாத் குல்ஷன் மீர், பிரபல மறைந்த உஸ்தாத் சோஹன் லாலின் மகனாவார். இவர்களின் தந்தை இவர்களின் ஆசிரியர் மற்றும் குரு மட்டுமல்ல அவர் தனியே இசையமைக்கிறார். இவர்களின் இசை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை அவர் செய்கிறார். சில நேரங்களில் அவர் இவர்களுடன் சேர்ந்து பாடுகிறார்.

இதையும் பாருங்க : ஆண் நபரை கட்டி அனைத்து முத்தும் கொடுக்க செல்லும் ஜூலி – அப்போ மார்க் நிலமை ?

- Advertisement -

நூரன் சகோதரிகளின் உண்மையான பெயர் ஜோதி நூரன் மற்றும் சுல்தானா நூரன். இவர்கள் இந்தியாவின் ஜலந்தரைச் சேர்ந்த ஒரு சூபி இசை பாடும் இரட்டையர்கள் ஆவர். மேலும், இவர்கள் பல படங்களில் பாடல் பாடியிரக்கிறார்கள் தமிழ் திரைப்படங்களிலும் சில பாடல்கள் பாடியிருக்கிறார்கள். போகன் படத்தில் “கூடுவிட்டு கூடு பாய்ஞ்சா” என்ற பாடல் பாடியுள்ளார்.

அதே போல விஷால் நடிப்பில் வெளியான பாயும் புலி படத்தில் “சூடான மோகினி” பாடலை பாடியது இந்த நூரன் சகோதிரி (ஜோதி) என்பது எத்தனை பேருக்கு தெரியும். அதே போல இவர்கள் பல்வேறு விருதுகளை கூட வாங்கியுள்ளார்கள். சிறந்த பெண் பாடகருக்கான மிர்ச்சி இசை விருதுகள், கிமா விருதுகள் 2015, ஹைவே” படத்தில் “படகா குட்டி” பாடல் – விருது, கிஸ்ஸா பஞ்சாப்” படத்தில் -“ஜிந்தே மரியே” பாடல் – விருது இவை எல்லாம் அடக்கம்.

-விளம்பரம்-
Advertisement