டிஆர்பி ரேட்டிங்கில் இந்த ஆண்டில் 50வது வாரத்தில் டாப் 5 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீப காலமாக ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது.
வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்கள் வரிசை கட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் டிவி திகழ்கிறது. எப்போதும் இந்த இரு சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. அதோட டிஆர்பி ரேட்டிங்கில் கூட இந்த இரு சேனல்களின் சீரியல்கள் தான் மாறி மாறி முதலிடம் பிடிக்கிறது.
சீரியல் டிஆர்பி:
அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டின் 50வது வாரத்தில் டிஆர்பியில் முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. சில மாதங்களாகவே விஜய் டிவியின் சீரியலை, சன் டிவி சீரியல்கள் பின்னுக்கு தள்ளி இருக்கிறது. எப்போதுமே டாப் 5ல் ஒரு இடத்தை ஆவது விஜய் டிவி சீரியல்கள் பிடித்து விடும். ஆனால், இந்த முறையும் முதல் ஐந்து இடங்களையும் சன் டிவி தொடர்கள் தான் பிடித்திருக்கிறது. அந்த பட்டியல் இதோ,
கயல்:
எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் கயல் சீரியல் இருக்கிறது. இந்த வாரம் 9.95 புள்ளிகளை பெற்று இருக்கிறது. தனது குடும்பத்திற்காக எல்லா சந்தோசத்தை இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை தான் கயல் சீரியல். அடுத்தடுத்து கயலுக்கு பல தொந்தரவுகள் வந்த நிலையில் தற்போது நிலைமை மாறி பாசிட்டிவான கண்ணோட்டத்தில் இந்த தொடரை ஒளிபரப்பி வருகிறார்கள்.
சிங்க பெண்ணே:
வாரம் வாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் ‘சிங்க பெண்ணே’ சீரியல் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.92 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ்சில் வேலை செய்து கொண்டிருக்கிறார் ஆனந்தி. இவருடன் சில பேர் அங்கு வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து தான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
மூன்று முடிச்சு:
‘மூன்று முடிச்சு’ சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 9.63 புள்ளிகளை பெற்று இந்த வாரம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலில் சுவாதி கதாநாயகியாகவும், இவருக்கு ஜோடியாக நடிகர் நியாஸ் ஹீரோவாகவும் நடிக்கிறார்கள். சமீபத்தில் தொடங்கிய இந்த சீரியல் தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சீரியலில் நந்தினி-சூர்யா திருமணம் முடிந்து விட்டது. இனி சூர்யா அம்மா என்ன செய்வார்? என்ற ட்ராக்கில் தான் சென்று கொண்டு இருக்கிறது.
மருமகள்:
கடந்த வாரம் ஆறாவது இடத்தில் இருந்த ‘மருமகள்’ சீரியல் இந்த வாரம் 8.95 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு தான் சன் டிவியில் ஒளிபரப்ப தொடங்கினார்கள். ஒளிபரப்பான நாளிலிருந்து தற்போது வரை இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சீரியலில் பிரபு-ஆதிரை திருமணம் முடிந்தது. அதற்கு பின் அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் தான் விறுவிறுப்பாக செல்கிறது.
ராமாயணம்:
டிஆர்பி ரேட்டிங்கில் 8.65 புள்ளிகளை ஐந்தாவது இடத்தில் ராமாயணம் சீரியல் இருக்கிறது. பழமை மிக புராணங்களில் இதுவும் ஒன்று.