அடேங்கப்பா சூர்யாவின் TSK படம் இத்தனை கோடி விலை போனதா !

0
666

சூர்யாவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். கீர்த்தி சுரேஷ், பழம்பெரும் காமெடி நடிகர் செந்தில், நவரச நாயகன் கார்த்திக் என திறமை வாய்ந்த கலைஞர்கள் நடித்துள்ள இந்த படம் வரும் பொங்கல் அன்று திரைக்கு வருகிறது.

Actor Surya

இந்த படத்தின் தமிழக தியேட்டர் உரிமையயை திருச்சியை சேர்ந்த தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் பரதன் பிலிம்ஸ் உரிமையாளர் வாங்கியுள்ளார். அதன் மொத்த தியேட்டர் உரிமை தொகை ₹ 37 கோடியாகும்.

இதனை தமிழகம் முழுவதும் ஏரியாவின் அடிப்படையில் ₹ 55 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். இது இதற்கு முன்னர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த படமான சிங்கம்-3யை விட அதிக தொகையாகும்.

இதையும் படிக்கலாமே:
பரோட்டா சூரியின் மகன் திரைக்கு வருகிறார் – முதல் படமே பெரிய இயக்குனருடன்

பொங்கல் அன்று கிட்டத்தட்ட 7 படங்கள் திரைக்கு வர உள்ளது. பொங்கல் ரேஸில் TSK பட்டையை கிளம்பினால் மட்டுமே போட்ட தொகையை எடுக்க முடியும். ஆனால் படம் நிச்சயம் வெற்றி பெரும் என அனைவரும் நம்பிக்கையோடு உள்ளனர். படத்திற்கு கூட்டம் சேருகிறதா இல்லையா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.