இவன் இளைஞர்களுக்கு ஆபத்தான ஒரு உதாரணம் – TTF வாசன் வீடியோவை கண்டு கொந்தளிக்கும் நெட்சன்கள்.

0
1003
ttf
- Advertisement -

கடந்த இரு தினங்களாகவே சமூகவலைதளத்திலும் சரி, நியூஸ் சேனல்களிலும் சரி அதிகமாக பேசப்படும் விடயமாக டிடிஎஃப் வாசனின் பிறந்தநாள் கொண்டாட்டம் மாறியுள்ளது. குறிப்பாக 2கே கிட்ஸ்க்கு மிகவும் பிடித்த நபராக டிடிஎப் வாசன் இருக்கிறார். ஆனால் 90 கிட்ஸ்களுக்கு இவர் யார் என்று தெரியாது. இருந்தாலும் கடந்த இரு தினங்களாகவே எங்கு பார்த்தாலும் டிடிஎஃப் வாசனின் பிறந்தநாள் கொண்டாட்டம் சமூக வலைதளத்தில் அதிக அளவு பேசப்பட்டு வருவதால் அவருடைய வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. இந்நிலையில் இப்படி அதிகமாக பேசப்படும் டிடிஎஃப் வாசன் யார் என்பது குறித்த தகவலையும், அவர் மீது தற்போது சமூக ஆர்வலர்கள் வைத்துள்ள குற்றச்சாட்டுகளையும் இங்கே காணலாம்.

-விளம்பரம்-

அதன்படி கோவையில் ஒரு சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்தவர் தான் இந்த டிடிஎஃப் வாசன் தனது தந்தையின் இறப்பிற்குப் பிறகு அவருடைய புல்லட்டை ஓட்ட பழகிய அவர் நாளடைவில் பைக் மீது ஏற்பட்ட பிரியம் காரணமாக அதையே தனது வேலையாகவும் மாற்றினார். பைக்கில் இந்தியா முழுவதும் பயணிக்கும் அவர் அதனை எல்லாம் வீடியோவாக எடுத்து தனது youtube சேனலில் பதிவேற்றி வந்தார். ஆரம்பத்தில் பெருமளவு பார்வையாளர்கள் அவருக்கு வரவில்லை என்றாலும் நாளடைவில் அவருக்கு சிறுவர்கள் இடையே ஆதரவு பெறுகியது.

- Advertisement -

பின் தொடரும் 27 லட்சம் பேர் :

அதன் காரணமாக அசுர வளர்ச்சி அடைந்த அவரது யூடியூப் சேனலில் தற்போது 27 லட்சம் பேர் அவரை பின்தொடரும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார். குறிப்பாக சிறுவயது வாலிபர்கள் அவர் வேகமாக பைக் ஓட்டுவதையும், பைக் ஸ்டண்ட் செய்வதையும் பார்த்து பிடித்து போக அவர்களுக்கு பைக் மீதுள்ள மோகம் காரணமாக அவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக அதிகளவு ரசிகர் பட்டாளத்தை ஈர்த்த வாசன் சமீபத்தில் தனது 22 வது பிறந்த நாளை கொண்டாடினார்.

வாசனுக்காக திரண்ட 8000 இளைஞர்கள் :

அப்பொழுது தனது ரசிகர்களை சந்திப்பதற்காக ஒரு மீட்டப் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்த அவர் ரசிகர்கள் மத்தியில் தனது பயணம் குறித்த சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கிட்டத்தட்ட 8000 ரசிகர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் டிடிஎப் வாசன் இளைஞர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக இருப்பதாக ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுந்துள்ளன.

-விளம்பரம்-

தவறான ஒரு முன் உதாரணம்

ஏனெனில் இந்தியாவில் தற்போது அதிக அளவு பைக் விபத்துகளில் சிக்குபவர்கள் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் தான். எனவே டி டி எப் வாசன் போன்று youtubeபர்கள் வேகமாக பைக் ஓட்டுவதையும், ஸ்டண்ட் செய்வதையும் சமூக வலைதளத்தில் பதிவிடுவதால் அதனைக் கண்டு இளைஞர்களும் அதேபோன்று முயற்சியில் எவ்வித பயிற்சியும், பாதுகாப்பு முறைகளும் இன்றி சாகசத்தில் ஈடுபட்டு விபத்தில் சிக்கும் தவறான ஒரு முன் உதாரணம் இவரால் ஏற்பட்டுள்ளது.

247 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் :

இதன் காரணமாக அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வரும் வேளையில் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த பிரபல பெண் நிர்வாகி காயத்ரி ஸ்ரீகாந்த் என்பவர் சமூக வலைதளத்தில் டிடிஎப் வாசன் 247 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அதில் ttf வாசன் ரோட பாத்தாலே முறுக்கனும் போல இருக்கு, சரி ஆனது ஆகட்டும் பாத்துக்கலாம் என்று பேசி இருங்கறார். அந்த வீடியோவை பகிர்ந்த காயத்ரி டிடிஎஃப் வாசன் போன்ற ஒருவர் இந்த வளரும் சமூகத்தில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு தவறான முன் உதாரணமாக இருக்கிறார்.

குவியும் புகார்கள் :

இதுபோன்ற செயல் இனி வளரும் இளைஞர்களுக்கு ஆபத்தான ஒரு உதாரணமாக மாறும் என்பதனால் இவருடைய யூடியூப் சேனலை போலீசார் கண்காணிக்க வேண்டும் என்றும் அவரது சேனலை தடை செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும், இவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். என்னதான் ஒருபுறம் அவருக்கு விமர்சனங்கள் அதிகரித்து வந்தாலும் 2கே கிட்ஸ் மத்தியில் அவருக்கு பாசிட்டிவான கமெண்ட்ஸ் அதிகளவில் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement