போலீஸ் என்கிட்ட பொய் சொல்லிட்டாங்க, என் மேல கை வச்சிருந்தா கூட பரவாயில்ல பசங்க மேல கை வச்சிட்டாங்க-TTF வாசன் ஆவேசம்

0
526
vasan
- Advertisement -

ஒரு சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்தவர் தான் இந்த டிடிஎஃப் வாசன் தனது தந்தையின் இறப்பிற்குப் பிறகு அவருடைய புல்லட்டை ஓட்ட பழகிய அவர் நாளடைவில் புல்லட்டை மீது ஏற்பட்ட பிரியம் காரணமாக அதையே தனது வேலையாகவும் மாற்றினார். பைக்கில் இந்தியா முழுவதும் பயணிக்கும் அவர் அதனை எல்லாம் வீடியோவாக எடுத்து தனது youtube சேனலில் பதிவேற்றி வந்தார். ஆரம்பத்தில் பெருமளவு பார்வையாளர்கள் அவருக்கு வரவில்லை என்றாலும் நாளடைவில் அவருக்கு சிறுவர்கள் இடையே ஆதரவு பெறுகியது.

-விளம்பரம்-

27 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் :

அதன் காரணமாக அசுர வளர்ச்சி அடைந்த அவரது யூடியூப் சேனலில் தற்போது 27 லட்சம் பேர் அவரை பின் தொடர்கிறார்கள். குறிப்பாக சிறுவயது வாலிபர்கள் அவர் வேகமாக பைக் ஓட்டுவதையும், பைக் ஸ்டண்ட் செய்வதையும் பார்த்து பிடித்து போக அவர்களுக்கு பைக் மீதுள்ள மோகம் காரணமாக அவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடலூரில் ஒரு அலுவலகம் திறப்பதற்கு சென்றிருந்தார். அங்கு பலரும் அவரை காண பல ரசிகர்களை வந்திருந்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் டிடிஎஃப் வாசனை சந்திக்க வந்த ரசிகர்கள் பைக்கில் மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பிக்கொண்டும் வந்த இளைனர்களை பிடித்து அடிக்க தொடங்கினர். ஆனால் கூட்டம் அதிகமாகிக்கொண்டே சென்றதால் காவலர்கள் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனாலும் கூட்டம் அதிகமாகிக்கொண்டே ஊர்வலம் சென்றது.

ஊர்வலத்தில் விபத்து :

இந்நிலையில் இவர்கள் “அண்ணா மேம்பாலம்” அருகே சென்றதும் அங்கே இருந்த மக்களின் மீது பைக்குகளை மோதி விபத்து ஏற்படுத்தியத்தினால் கடும் கோவமடைந்த காவல் துறை 200 மேற்பட்ட பைக்குகளை மடக்கி வெளுத்து வாங்கியும் அபராதம் விதித்தும் வந்தனர். இதற்கு டிடிஎஃப் வாசன் வெளியிட்ட தகவலின் படி காவலர்கள் மீது தவறில்லை ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு தான் காவலர்கள் தண்டனை கொடுத்துள்ளதாக கூறியிருந்தார்.

-விளம்பரம்-

லையில் டிடிஎஃப் வாசன் கூறியது :

ஆனால் அதற்க்கு பிறகு நேரடி ஒளிபரப்புல் காவல் துறை தன்னிடம் பொய் சொல்லி விட்டதாகவும். நம்மை அடித்த காவலர்களே நம்மை ராஜ மரியாதியுடன் உக்கார வைப்பார்கள் என்றும், நான் இதனை வை வர்த்தயாக சொல்லவில்லை. என் மீது ஐந்து வழக்குகள் இருக்கின்றன அதற்காக நான் வருத்தப்படவில்லை. நமக்கு போலீசில் கேஸ் வாங்குவதெல்லாம் துணிக்கடையில் கட்டைப்பை வாங்குவது போல என்று பேசியிந்தார்.

பிராண்டை உருவாக்க போறேன் :

மேலும் என்னை அடித்திருந்தால் கூட பரவாயில்லை ஆனால் என்னுடைய பசங்களை அடித்து விட்டனர். நான் அவர்களிடம் கேட்டதற்கு கூட்டத்தில் இருந்து கற்களை வீசியதால்தான் தடியடி நடத்தப்பட்டதாக கூறியிருந்தனர். இதனால் எனக்கு சரியான கோவம் வந்துவிட்டது. இதற்காகவே நான் டிடிஎஃப் நின்ற பிராண்டை உருவாக்க போகிறேன் என்று கூறியிருந்தார். இப்படி தொடர்ந்து வீடியோகளை வெளியிடும் டிடிஎஃப் வாசன் மீது பலரும் குற்றம் சஷ்டி வருகின்றனர்.

தவறான வழியில் எடுத்துச்செல்லும் வாசன் :

இவர் இப்படி செய்வது தவறான ஒரு முன் உதாரணம் ஏனெனில் இந்தியாவில் தற்போது அதிக அளவு பைக் விபத்துகளில் சிக்குபவர்கள் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் தான். எனவே இளைஞர்கள் வாசன் போன்று youtubeபர்கள் வேகமாக பைக் ஓட்டுவதையும், ஸ்டண்ட் செய்வதையும் சமூக வலைதளத்தில் பதிவிடுவதால் அதனைக் கண்டு இளைஞர்களும் அதேபோன்று முயற்சியில் எவ்வித பயிற்சியும், பாதுகாப்பு முறைகளும் இன்றி சாகசத்தில் ஈடுபட்டு விபத்தில் சிக்கும் தவறான ஒரு முன் உதாரணம் இவரால் ஏற்பட்டுள்ளது பலரும் இவரை குற்றம் சாட்டி வருகின்றனர்.

Advertisement