நான் அதே பின்னணியில் இருந்து வந்தவள் தான் – கழுவேத்தி மூர்க்கன் பட அனுபவம் குறித்து ரஞ்சித் பட நாயகி துஷாரா

0
1907
kazhuvethi moorkkan
- Advertisement -

கழுவேத்தி மூர்க்கன் பட அனுபவம் குறித்து நடிகை துஷாரா விஜயன் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக துஷாரா விஜயன் வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘சர்பட்டா பரம்பரை படத்தில் ‘மாரியம்மா’வாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருக்கிறார். இந்த படத்தில் பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. மேலும், இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை துஷாரா விஜயன் தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் பரிச்சமில்லாத முகம் தான். ஆனால், இந்த படத்தில் இவரது நடிப்பு பாரட்டப்பட்டுகளை பெற்றது. இதற்கு முன் இவர் ஆரம்பத்தில் மாடலிங் செய்து கொண்டிருந்தார்.

- Advertisement -

துஷாரா விஜயன் திரைப்பயணம்:

அதோடு இவர் ஒரு சிறந்த நடனக் கலைஞரும் ஆவார். அதற்கு பிறகு 2019 ஆம் ஆண்டு வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், அந்த படம் அவருக்கு பெரிதாக பேசவில்லை. அதனை தொடர்ந்து இவர் பல குறும்படங்களில் நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இறுதியாக இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்து இருந்தார்.

கழுவேத்தி மூர்க்கன் படம்:

இந்த படத்தில் காளிதாஸ், கலையரசன், துஷாரா விஜயன், அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள்நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. அதிலும் இந்த படத்தில் மற்ற நடிகர்களை விட துஷாராவின் நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருந்தது. இதனை தொடர்ந்து இவர் வசந்தபாலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தற்போது துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கழுவேத்தி மூர்க்கன். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் கௌதம ராஜ் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

துஷாரா விஜயன் அளித்த பேட்டி:

இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனிஸ்காந்த் போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
தற்போது இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை துஷாரா விஜயன் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், நான் படங்களை தேர்வு செய்வதில் கவனமாக இருப்பேன். குறிப்பாக என்னுடைய கதாபாத்திரம் எளிதில் என்னுடன் கனெக்ட் ஆக வேண்டும் நினைப்பேன். அந்த வகையில் கழுவேத்தி மூர்க்கன் படத்தில் கவிதா கதாபாத்திரம் என் மனதிற்கு ரொம்ப நெருக்கமாக இருந்தது.

பட அனுபவம் குறித்து சொன்னது:

படத்தில் திண்டுக்கல்லில் உள்ள ஒரு வழக்கமான கிராமத்து பெண். நான் அதே பின்னணியில் இருந்து வந்ததால் இந்த கதாபாத்திரம் எனக்கு எளிதாக இருந்தது. இந்த படம் வெளியான பிறகு இந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நினைவில் வைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அருள்நிதி சார் ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகர். இந்த படத்தில் அவர் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். அவரது படங்களில் காதல் காட்சிகள் பெரிதாக இருக்காது. ஆனால், இந்த படத்தில் எனக்கும் அருள்நிதி சாருக்கும் இடையில் சில அழகான காட்சிகளை இயக்குனர் கொடுத்திருக்கிறார்

Advertisement