பச்சையா இப்படி பொய் சொல்றீங்களே- மஞ்சள் வீரன் இயக்குனருக்கு போன் போட்டு வெளுத்த டிடிஎப் வாசன்

0
303
- Advertisement -

மஞ்சள் வீரன் படத்தில் இருந்து நீக்கியது தொடர்பாக டிடிஎஃப் வாசன் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே மஞ்சள் வீரன் படம் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சமூக வலைதளத்தின் மூலம் வைரலாக்கப்பட்டு மத்தியில் பிரபலமான நபராக திகழ்பவர் டிடிஎஃப் வாசன். இவர் தன்னுடைய உயரக பைக்கில் வேகமாக செல்வது, அப்படி செல்லும் போது ஏழைகளுக்கு பணம் மற்றும் சாப்பாடு தொடர்பாக உதவி செய்வது என்று வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இதனால் இவர் சீக்கிரமாகவே 2k கிட்ஸ்களின் மத்தியில் பிரபலமான நபராக இருக்கிறார். இருந்தாலும், இவர் வண்டியில் அதி வேகமாக சென்று பிறரை பயமுறுத்துவது, சாலை விதிகளை மீறுவது என்று பல வேலைகளை செய்து சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இதனாலே இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. இவர் மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடிப்பதாக அறிவித்தார். இந்த படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாக இருக்கிறார். இந்தப் படத்தை செல் அம் என்பவர் இயக்குகிறார். அதோடு இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வாசனுடைய பிறந்தநாள் அன்று வெளியாகி இருந்தது.

- Advertisement -

இயக்குனர் அளித்த பேட்டி:

அதற்குப் பிறகு இந்த படத்தை குறித்து எந்த தகவலுமே வெளியாகவில்லை. இதை அடுத்து சமீபத்தில் மஞ்சள் வீரன் படத்தின் இயக்குனர் அளித்த பேட்டியில், இந்த படத்தில் கதாநாயகனாக டிடிஎஃப் வாசன் நடித்தார். ஆனால், தற்போது அவரை இந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டோம். வேறு ஒரு நடிகர் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அது தொடர்பான தகவலையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியிட இருக்கிறோம். அவரை நீக்குவதற்கு காரணம், சூழ்நிலை ஒத்து வரலை. அவருடைய வேலைகளை பார்த்துக் கொண்டும் இந்த படப்பிடிப்பில் நடிப்பதற்கும் சூழ்நிலைகள் அமையவில்லை. 35% படப்பிடிப்பு முடிந்தது என்று கூறி இருந்தார்.

டிடிஎஃப் வாசன் வீடியோ:

இப்படி இவர் சொன்னது இணையத்தில் சர்ச்சைகளை எழுப்பியது. பலரும் வாசனை விமர்சித்து பேசி இருந்தார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக மனவேதனையில் டிடிஎஃப் வாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், என்னிடம் சொல்லாமலேயே மஞ்சள் வீரன் படத்தில் இருந்து என்னை நீக்கி விட்டார். என்னிடம் சொல்லில் இருந்தால் நானே விலகி இருப்பேன். அண்ணா அண்ணா என்று சொல்லி விளம்பரத்திற்காக என்னை நம்ப வைத்து துரோகம் செய்து இருக்கிறார்கள். இப்ப வரைக்குமே எனக்கு இயக்குனர் போன் செய்து பேசவே இல்லை. நான் போன் செய்தாலுமே அவர் என்னிடம் பேசவில்லை. யாரிடமோ போனை கொடுத்து மீட்டிங், dinnerல் இருப்பதாக சொல்கிறார்கள்.

-விளம்பரம்-

இயக்குனர் குறித்து சொன்னது:

எதற்கு இந்த கேவலமான வேலை என்று தெரியவில்லை. இதுவரை இந்த படத்திற்காக ஒரு பூஜை, ஒரு போட்டோ சூட் மட்டும் தான் எடுத்திருக்கிறார்கள். பூஜைக்கு கூட பணம் இல்லை என்று நான் தான் கொடுத்தேன். அந்த பணத்தையும் நான் திருப்பி கேட்கவில்லை, கேட்கவும் மாட்டேன். நீங்கள் நன்றாக வளர்ந்து வந்தால் எனக்கு சந்தோசம் தான். ஆனால், எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான். நேரடியாக மீடியாவிற்கு சொல்வதற்கு முன்பு என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். எனக்கு துரோகம் செய்தவர்கள் முன்பு நான் வளர்ந்து வெற்றி அடைவது தான் அவர்களுக்கு நான் கொடுக்கும் பதிலடி. நான் மனமுடைய மாட்டேன், தளரமாட்டேன். இந்த மாதிரி ஒரு பச்சை துரோகத்தை என்னுடைய வாழ்க்கையில் நான் சந்தித்ததே கிடையாது.

படம் குறித்து சொன்னது:

அதேபோல் படப்பிடிப்பு 35 சதவீதம் நடந்ததாகவும், அம்மா- வில்லன் காட்சிகள் எல்லாம் எடுத்ததாகவும் சொல்லி இருந்தார்கள் . எல்லாமே சுத்தமான பொய். நான் ஆரம்பத்தில் இருந்து அவருடன் தான் இருக்கிறேன். இதுவரை ஒரு காட்சி கூட எடுக்கவில்லை. எவ்வளவு பிரச்சனைக்கும் மத்தியிலும் அவர் கூப்பிட்டால் நான் வருவேன். எப்போது சூட்டிங் என்று கேட்டாலுமே, 15 நாள், 20 நாள், ஒரு மாதம் என்று சொல்லிக்கொண்டே தான் இருப்பார்களே தவிர சூட்டிங் நடத்தியது கிடையாது. என் மீது வீண்பழி போட்டு இருப்பது தான் எனக்கு வேதனையாக இருக்கிறது என்று கூறி சில ஆடியோ ஆதாரங்களை வெளியீட்டு இருக்கிறார்.

Advertisement