டிடிஎஃப் வாசன் நடிக்கும் இரண்டாவது படம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நபராக திகழ்பவர் டிடிஎஃப் வாசன். இவர் தன்னுடைய உயரக பைக்கில் வேகமாக செல்வது, அப்படி செல்லும் வழியில் இருக்கும் ஏழைகளுக்கு பணம் மற்றும் சாப்பாடு கொடுத்து உதவி செய்வது என்று வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். இதனால் இவர் சீக்கிரமாகவே 2k கிட்ஸ்களின் மத்தியில் பிரபலமான நபராக மாறி விட்டார்.
தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நபர்களில் டிடிஎஃப் வாசனும் ஒருவர். மேலும், இவர் பிரபலமாக இருந்தாலும் வண்டியில் அதி வேகமாக சென்று பிறரை பயமுறுத்துவது, சாலை விதிகளை மீறி கூட்டத்திற்குள் செல்வது என்று வேலைகளை செய்து சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். இவர் இளைஞர்களுக்கு முன் உதாரணமாக மட்டுமில்லாமல் பல இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதற்கு வழிவகை செய்கிறார் என்றெல்லாம் நெட்டிசன்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.
டிடிஎஃப் வாசன் குறித்த தகவல்:
இப்படி இவர் குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் இருந்தாலும் தற்போது இவர் சினிமாவில் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாக இருக்கிறார். இந்தப் படத்தை செல்லம் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் கூல் சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
டிடிஎப் நடிக்கும் படம்:
அதோடு இந்த படத்தில் இவருடன் நடிக்க இருக்கும் நடிகர்கள் குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
இந்நிலையில் டிடிஎப் வாசன் நடிக்கும் இரண்டாவது படம் குறித்து அப்டேட் தான் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே மஞ்சள் வீரன் படத்தினுடைய படப்பிடிப்பு முடியவில்லை. அதற்குள்ளே இவர் இரண்டாவது படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். அந்த படத்திற்கு ஐபிஎல் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் பிரபல நடிகர் கிஷோர், அபிராமி உட்பட பலர் நடித்ததாக கூறப்படுகிறது.
டிடிஎப் வாசன் நடிக்கும் இரண்டாம் படம்:
மேலும், இந்த படத்தை இயக்குனர் கருணாகரன் இயக்குகிறார். ராதா பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அஸ்வின் விநாயகமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படம் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே போக்குவரத்து விதிமுறைகளை மீறி வண்டி ஓட்டியதால் வாசன் விபத்தில் சிக்கி இருந்தார். இதனால் இவருக்கு நிறைய அடிபட்டது. பின் இவருடைய ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
டிடிஎப் வாசன் விபத்து :
மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிடிஎஃப் வாசன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருந்தது. மருத்துவ சிகிச்சைக்கு பிறகு டிடிஎஃப் வாசன் ஜெயிலுக்கு சென்றார். பின் அவர் ஜாமினில் வெளியே வந்தார். ஜாமினில் வெளியே வந்தாலும் இவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கையெழுத்து போட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது . தற்போது அவர் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்