‘மஞ்சள் வீரன்’ – முதல் படத்திலேயே டிடிஎப் வாசன் உடன் ரொமான்ஸ் பண்ணப்போகும் நடிகை இவரா?

0
2257
Manjalveeran
- Advertisement -

டிடிஎஃப் வாசன் நடிக்கும் மஞ்சள் வீரன் படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போகும் நடிகை குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நபராக திகழ்பவர் டிடிஎஃப் வாசன். இவர் தன்னுடைய உயரக பைக்கில் வேகமாக செல்வது, அப்படி செல்லும் வழியில் இருக்கும் ஏழைகளுக்கு பணம் மற்றும் சாப்பாடு தொடர்பாக உதவி செய்வது என்று வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இதனால் இவர் சீக்கிரமாகவே 2k கிட்ஸ்களின் மத்தியில் பிரபலமான நபராக இருக்கிறார். தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நபர்களில் டிடிஎஃப் வாசனும் ஒருவர். இப்படி இவர் பிரபலமாக இருந்தாலும் வண்டியில் அதி வேகமாக சென்று பிறரை பயமுறுத்துவது, சாலை விதிகளை மீறி கூட்டத்திற்குள் செல்வது என்று வேலைகளை செய்து சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். இவர் இளைஞர்களுக்கு முன் உதாரணமாக மட்டுமில்லாமல் இப்படி இவர் செய்வதன் மூலம் பல இளைஞர்கள் தவறான பாதையில் செல்வார்கள் என்றெல்லாம் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றார்கள்.

- Advertisement -

டிடிஎஃப் வாசன் குறித்த தகவல்:

இப்படி இவர் குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் இருந்தாலும் தற்போது இவர் சினிமாவில் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாக இருக்கிறார். இந்தப் படத்தை செல் அம் என்பவர் இயக்குகிறார். இந்த படம் குறித்து அறிவிப்பை டிடிஎஃப் வாசனின் பிறந்தநாள் அன்று அறிவித்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் கூல் சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

டிடிஎஃப் வாசன் நடிக்கும் படம்:

மேலும், இந்த படத்தினுடைய படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் டிடிஎஃப் வாசன் படத்தில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார் என்ற தகவல் வெளியான சில நாட்களிலேயே இயக்குனர் சென்ற கார் விபத்தில் சிக்கி இருந்தது. அப்போது இயக்குனர் மோதிய பைக்கில் இருந்த நபர் ஒருவர் காயமடைந்திருந்தார். அவரை இயக்குனர் தான் ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தார்.

-விளம்பரம்-

டிடிஎஃப் வாசன் படம் குறித்த சர்ச்சை:

ஆனால், இயக்குனர் தப்பி சென்றதாக சோசியல் மீடியாவில் சர்ச்சை கிளம்பி இருந்தது. அதன் பின் விளக்கம் கொடுத்து டிடிஎப் வாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். தற்போது இந்த படத்திற்காக டிடிஎஃப் வாசன் தயாராக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்காக இவர் நடிப்பு பயிற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் இவருடன் நடிக்க இருக்கும் நடிகர்கள் குறித்த தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

டிடிஎஃப் வாசனுக்கு ஜோடியாக நடிப்பது:

இந்த நிலையில் டிடிஎஃப் வாசனுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதாவது, டிடிஎஃப் வாசன் ஹீரோவாகிறார் என்ற தகவல் வந்தவுடனே கதாநாயகி யார்? என்று ஆவலுடன் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அப்போது youtube பிரபலம் அமலா சாஜி தான் இவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பை படக்குழு அறிவிக்கவில்லை. உண்மையிலேயே அமலா சாஜி தான் கதாநாயகியா? இல்லை வேறு யாராவதா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement