விடாமல் துரத்தும் நீதிமன்றம் – TTF யூடுயுப் சேனலுக்கு வந்த பேரிடி. தங்கங்களா மனச தேத்திக்கோங்க.

0
422
- Advertisement -

டிடிஎஃப் வாசனின் யூடுயூப் சேனலுக்கு வந்த புதிய சிக்கல் தற்போது டிடிஎஃப் கன்னிஸ் மத்தியில் பேரிடியாக அமைந்து இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறை சென்ற TTF வாசன் சமீபத்தில் தான் ஜாமினில் வெளியில் வந்தார். ஜாமீனில் வெளியே வந்த அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். பத்திரிக்கையாளர் ஒருவர் இனி பைக் ஓட்ட முடியாது என்பதால் இனி படத்தில் முழு கவனம் செலுத்தப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த டிடிஎஃப் வாசன் பைக்கும் ஓட்டுவேன் படத்திலும் நடிப்பேன். பேஷனை எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறினார்.

-விளம்பரம்-

இதற்கு பத்திரிக்கையாளர் உங்களுடைய ஓட்டுனர் உரிமை தான் ரத்து செய்து விட்டார்களே அப்போது எப்படி பைக் ஓட்டுவீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ttf வாசன் இன்டர்நேஷனல் லைசன்ஸ் எடுக்கலாம், மேல்முறையீடு ஏதாவது செய்யலாம், என்னுடைய கை போனதை விட லைசென்ஸ் போனது தான் கண் கலங்கி விட்டேன் என்று கூறி இருந்தார். TTF வாசன் மீண்டும் பைக் ஓட்டுவார் என்று சொன்னதால் இதனால் TTF வாசன் கன்னிஸ்கள் குஷியானார்கள்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் உள்நாட்டில் லைசென்ஸ் இருந்தால் மட்டுமே வாகனம் ஓட்ட முடியும் விபத்து ஏற்படுத்தியதற்காக லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டவர் சர்வதேச லைசன்ஸ் இருப்பதை காட்டி இந்தியாவில் எந்த ஒரு பகுதியிலும் பைக் ஓட்ட முடியாது என்று தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்தது.இப்படி ஒரு நிலையில் ஜாமினில் வெளியே வந்த வாசன், முதன் முறையாக தனது யூடுயூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் பேசிய அவர் ‘பத்திரிகையாளர்களிடம் இனி நான் இன்டர்நேஷனல் லைசென்ஸ் வைத்து பைக் ஓட்டுவேன் என்று சொன்னதை தவறாக புரிந்து கொண்டார்கள். நான் இன்டர்நேஷனல் லைசென்ஸ் வாங்கி வெளிநாட்டில் தான் பைக் ஓட்டுவேன் என்று சொன்னேன். அதை அவர்கள் அப்படியே மாற்றி போட்டுவிட்டார்கள். விரைவில் இன்டர்நேஷனல் லைசன்ஸ் எடுப்பேன். அதற்கான வேலைகளை விரைவில் நான் துவஙகுகுவேன்.

-விளம்பரம்-

ஜாமீன் வெளியில் வந்த டிடிஎஃப் பார்சல் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் விலை உயர்ந்த பைக் மீது அமர்ந்தவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் டிடிஎஃப் வாசன் லைசன்ஸ் கேன்சல் பண்ணினால் என்ன வண்டி ஓட்டத்தானே கூடாது. ஆனால், உட்கார்ந்து பார்க்கலாம் அல்லவா. லைசன்ஸ் இல்லையென்றால் சாலைகளில் தான் வண்டி ஓட்டக் கூடாது.

ஆனால், ரேஸ் டிராக்கில் வண்டி ஓட்டலாம் மேலும் இன்டர்நேஷனல் லைசன்ஸ் விரைவில் எடுப்பேன் என்றும் கூறியிருக்கிறார். இதனால் டிடிஎஃப் ரசிகர்கள் குஷியில் இருந்து வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு பேரிடி தரும் விதமாக டிடிஎஃப் யூடுயூப் சேனலுக்கு அடுத்த ஆப்பு வந்துள்ளது. டிடிஎஃப் வாசனின் யூடுயூப் சேனலை முடிக்க யூடுயூப் நிறுவனத்திற்க்கு காஞ்சிபுரம் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிறுவர்களுக்கு தவறான முறையில் வழிகாட்டுவதாகக்கூறி காவல்துறை கொடுத்த புகாரின் பேரில் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement