10 வருடங்கள் முன் சீரியல் வில்லியாக கலக்கிய பூஜாவா இது..? இப்படி மாறிட்டாங்க.! புகைப்படம் இதோ

0
3710
actress pooja
- Advertisement -

நெகட்டிவ் கதாபாத்திரங்கள் வழியே 10 வருடங்களுக்கு முன்பு சீரியல் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்கவைத்தவர் நடிகை பூஜா. ‘இந்தப் பொண்ணுகிட்ட எவ்வளவு வில்லத்தனம் பாரேன்’ எனப் பேசாத வாய் அரிது. தற்போது, தமிழ் சீரியலுக்கு பிரேக் கொடுத்திருக்கும் அவரை தொலைபேசியில் பிடித்துப் பேசினோம். அவர் பேச்சுக்கு முன்பு குட்டி பயோ…

-விளம்பரம்-

pooja-lokesh

- Advertisement -

பெயர்: பூஜா
கதாபாத்திரம்: நெகட்டிவ்
மீடியா என்ட்ரி: 14 வயதில்
ஃபேமிலி: ஸ்வீட் சிங்கிள்
தற்போது பணி: ஃபேஷன் டிசைனிங்
தமிழ் சீரியல் என்ட்ரி: குங்குமம்
தமிழ் சீரியல் ரீ-என்ட்ரி: விரைவில்

சீரியல்களில் என்னை வில்லியாகவே பார்த்திருப்பீங்க. நிஜத்துல பயங்கர ஜாலி பர்சன். யார்கிட்டேயும் சண்டைப் போடுறது பிடிக்காது. என் தாத்தாவும் பாட்டியும் கன்னட மொழியில் ஃபேமஸான ஆர்ட்டிஸ்ட். அதனால், எனக்குள்ளும் நடிப்பு விதை இருந்துச்சு. இப்போ, நான் ஃபேமிலியோடு பெங்களூரில் செம ஹேப்பியா இருக்கேன். 14 வயசுல மீடியா வாய்ப்பு கிடைச்சது. கன்னடத்தில் நிறைய படங்களிலும் சீரியல்களிலும் நடிக்க ஆரம்பிச்சேன். அதைப் பார்த்து, ‘குங்குமம்’ மெகா சீரியலிலும் நடிக்க, குஷ்பு மேடம் கூப்பிட்டாங்க. அப்படித்தான் சிங்கார சென்னைக்கு வந்தேன். தமிழ் சீரியலில் பெரும்பாலும் நெகட்டிவ் கதாபாத்திரங்களே கிடைச்சது.

-விளம்பரம்-

என் முகத்துக்கும் நெகட்டிவ் கதாபாத்திரம் பொருத்தமாக இருந்துச்சு. என் நடிப்பைப் பார்த்துட்டு வெளியிலிருந்து நிறைய திட்டு வந்தாலும், அது எனர்ஜியைத்தான் கொடுத்துச்சு. அதுதானே நம் நடிப்புக்குக் கிடைக்கும் உண்மையான விருது” எனப் புன்னகைக்கும் பூஜா, தன்னுடைய பர்சனல் பக்கங்களை புரட்டுகிறார்.

pooja

என் தம்பியும் நானும் சேர்ந்து ஒரு புரடெக்‌ஷன் ஹவுஸ் நடத்திட்டு இருக்கோம். மஜா டாக்கீஸ் (Majaa Talkies) என்கிற கன்னட நிகழ்ச்சியை புரொடியூஸ் பண்றோம். அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது என் தம்பிதான். நான் நடிச்சுட்டு இருந்தப்பவே காஸ்டியூம் டிசைனிங் மேலே ஆர்வமா இருந்தேன். கொஞ்ச வருஷத்துக்கு அப்புறம் சீரியலில் எனக்கான காஸ்டியூமை நானே டிசைன் பண்ணிக்க ஆரம்பிச்சேன். இப்போ நாங்க புரொடியூஸ் பண்ற நிகழ்ச்சியில் எல்லா ஆர்ட்டிஸ்டுக்கும் நான்தான் காஸ்டியூம் டிசைன் பண்றேன். குறிப்பா, என் தம்பிக்கு ஒவ்வொரு ஷோவுக்கும் ஸ்பெஷலா டிசைன் பண்றேன். பொண்ணுங்களுக்கு காஸ்டியூம் டிசைன் பண்றது ரொம்ப ஈஸி. பசங்களுக்கு பண்றதுதான் சவால். நார்மலா அவங்க போடும் பேன்ட், ஷர்ட்லேயே நம்ம கிரியேட்டிவை காட்டணும். எனக்குப் பிடிச்ச அந்த வேலையைத்தான் இப்போ பண்ணிட்டிருக்கேன்” என்றவரிடம், தமிழ் சீரியல் வாய்ப்பு குறித்து கேட்டதுமே, குரலில் எக்ஸ்ட்ரா துள்ளல்.

நிறைய தமிழ் சீரியல் வாய்ப்பு வருது. இப்பவும் என்னைச் சந்திக்கும் தமிழ் ரசிகர்கள் ‘ப்ளீஸ்… மறுபடியும் நடிக்க வாங்க’னு அன்பு மழையில் நனைக்கிறாங்க. அந்த அன்புக்காகவே சீக்கிரமா ரீ-என்ட்ரி கொடுக்கிறேன். அதுவரை கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்றவரிடம், ‘ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?’ எனக் கேட்டால், சட்டென பதில் வருகிறது.

actress pooja

pooja_lokesh

pooja lokesh

எனக்கு நிறைய கனவுகள் இருக்கு. சினிமாவும் சீரியலும் மட்டும்தான் என் உலகம். என் ஃபேமிலியும் என் விருப்பத்தை புரிஞ்சுட்டு சப்போர்ட் பண்றாங்க. எதிர்காலத்தில் நிறைய படங்களை டைரக்ட் பண்ணி, சக்ஸஸ்ஃபுல் வுமனா வலம்வரணும்” என்கிறார் பூஜா.

Advertisement