தமிழ் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தேர்தல் நடைபெறுவது வழக்கமான ஒன்று தான். இந்த சங்கத்தில் 2000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தலைவர் பதவியில் இருக்கும் சிவன் சீனிவாசன் தான் தற்போது மீண்டும் போட்டியிடுகிறார். மீண்டும் அவருடைய தலைமையிலான அணி தான் போட்டியிடுகிறது. அவரை தவிர பரத் தலைமையில் ஒரு அணி, தினேஷ் தலைமையில் ஒரு அணி என மூன்று அணிகள் போட்டியிட்டு இருக்கிறார்கள். நடிகை ஆர்த்தி கணேஷ் மட்டும் சுயேச்சையாக தலைவர் பதவிக்கும் அவருடைய கணவர் கணேஷ் அவர்கள் சுயேச்சையாக துணை தலைவர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள்.

இதில் தினேஷ் அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகை ரவீனா போட்டியிட மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தார். ஆனால், இவருடைய மனு நிராகரிக்கப்பட்டது. ஏற்கனவே நடிகை ரவீனா மீது நடிகர் சங்கத்திலிருந்து ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட செய்தி பரவி இருந்தது அனைவரும் அறிந்ததே. இதனால் ஓராண்டுக்கு சீரியலில் நடிக்க ரவீனாவிற்கு தடைபிடிக்கப்பட்டது. இந்த காரணத்தை சொல்லி தான் அவருடைய மனுவும் நிராகரிக்கப்பட்டு இருந்தது. மேலும், நேற்று சென்னையில் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றிருந்தது.
சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்:
இதில் பல சின்னத்திரை நடிகர், நடிகைகள் வாக்களித்து இருந்தார்கள். ஆனால், நடிகை ரவீனாவை மட்டும் ஓட்டு போட அனுமதிக்கவில்லை. இதனால் வேதனையில் நடிகை ரவீனா பேட்டி அளித்து இருந்தார். நேற்று வாக்கு பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. தலைவர் பதிவுக்கான வாக்குகள் முதலில் எண்ணப்பட்டது. அதில் நடிகர் பரத் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை முன்னிலையில் வகுத்து வந்தார். இவர் 491 வாக்குகள் பெற்று தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றிருக்கிறார். அவரை அடுத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சிவன் சீனிவாசன் 222 வாக்குகளும், தினேஷ் 175 வாக்குகளும், ஆர்த்தி 33 வாக்குகளும் பெற்றார்கள்.
https://www.youtube.com/watch?v=ALUy8eWpaRc
தேர்தல் ரிசல்ட்:
இதுவரையில் சங்க நிர்வாகத்தில் இளம் வயதில் தலைவர் ஆனது பரத் தான். அதற்குப்பின் செயலாளர் பதவிக்கான வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் நடிகர் நவீந்தர் 471 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நிரோஷா இரண்டாவது இடம் பிரித்துள்ளார். இதே கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பொருளாளர் பதவிக்கு நவீந்தர் போட்டியிட்டார். அப்போது எதிர் அணியில் இருந்த நிரோஷா தேர்தல் நடத்தை விதியை நவீந்தர் மீறி விட்டார் என்று தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்திருந்தார். இதனால் கடைசி நேரத்தில் தேர்தலில் இருந்து நீக்கம் செய்து தேர்தலில் நிற்க முடியாமல் போனது.

நவீந்தர் பற்றிய தகவல்:
அதற்கு அடுத்து நடந்த தேர்தலில் சுயேட்சையாக நவீந்தர் நின்றார். ஆனால், பெரிதாக வாக்குகளை வாங்க முடியவில்லை. தற்போது வெற்றி அணி சார்பாக செயலாளர் பதவிக்கு நின்று நவீந்தர் வெற்றி பெற்று இருக்கிறார். அதிலும் நிரோஷாவை எதிர்த்து நின்று நவீந்தர் வெற்றி பெற்று இருக்கிறார். மேலும், இது தொடர்பாக அளித்த பேட்டியில் நவீந்தர், நான் சுயேசியாக போட்டியிட்டபோது கூட எனக்கு நிறைய ஓட்டு விழுந்திருக்கிறது. அதற்கு காரணம் சீரியல் நடிகர், நடிகைகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் எந்த நேரம் என்றாலும் நான் போய் நிற்பேன்.

நவீந்தர் பேட்டி:
அதற்காகத்தான் எங்கள் உறுப்பினர்கள் ஆதரவு தந்திருக்கிறார்கள். இந்த தேர்தலிலும் என்னை செயலராக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கைக்கு பங்கம் வந்திராதபடி உறுப்பினர்களுக்கு என்னவெல்லாம் செய்ய அது எல்லாம் செய்ய முயற்சி செய்வேன். மற்றபடி முன்னாடி நடந்த கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்க்க எனக்கு விருப்பமில்லை. என்னுடைய வாய்ப்பு பறிக்கப்பட்டது வருத்தமாக இருந்தது. இருந்தாலும் காலமெல்லாம் மாற்றிடும் என்று நம்பினேன். இதோ மாத்திவிட்டது. அதனால் கடந்து போன சம்பவங்களை மறந்துவிடலாம் என்று கூறியிருக்கிறார்.






