மாநாடு தொடர்பாக கேட்ட 21 கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பொது செயலாளர் கொடுத்த பதில்

0
231
- Advertisement -

மாநாடு தொடர்பாக காவல்துறையினர் கேட்ட கேள்விக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் அளித்து இருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டு இருபவர் விஜய். இவர் பிப்ரவரி மாதம் தான் தமிழக வெற்றிக் கழகம் என்று தன் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். அதோடு, வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார்.

-விளம்பரம்-

அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்றியிருந்தார். விஜய் தன்னுடைய கட்சி கொடியை ஏற்றுவதற்கு முன்பு உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி, கொடியை ஏற்றி இருந்தார். அந்த கொடியில் வாகை மலரும், இருபக்கம் யானை படமும் இடம் பெற்றிருக்கிறது. பலரும் விஜய்யின் கட்சி கொடியை பாராட்டி வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

மாநாடு குறித்த தகவல்:

தற்போது மாநாட்டிற்கான வேலையை தான் புஸ்ஸி ஆனந்த் தொடங்கி இருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தான் தமிழக வெற்றிக் கழகத்தினுடைய முதல் மாநாடு நடைபெற இருக்கிறது.
மேலும், இந்த மாநாட்டிற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு விழுப்புரம் டி.எஸ்.பியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆன்ந்த் மனு கொடுத்து இருந்தார். அதில் முதல் மாநாடு செப்டம்பர் 23-ஆம் தேதி நடைபெற இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.

காவல்துறை நோட்டீஸ்:

இதை அடுத்து போலீஸ் சூப்பிரண்டு மற்ற போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் விஜய் மாநாடு நடத்தும் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார்கள். அங்கு மாநாட்டுக்கு வருபவர்கள் உடைய வாகனங்களை நிறுத்துவதற்கு தேவையான இடவசதி இருக்கின்றதா? மாநாடு நடந்தால் போக்குவரத்து பாதிக்கப்படுமா? பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுமா? மாநாட்டில் பங்கேற்க வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு ஏற்பாடு என்ன? மாநாட்டில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு உணவு எப்படி வழங்கப்பட உள்ளது? என்பவை பற்றி ஆலோசித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

புஸ்ஸி ஆனந்த் அனுப்பிய பதில் மனு:

அதுமட்டுமல்லாமல் விஜய் கட்சி சார்பில் கொடுத்த அனுமதி கடிதத்திலும் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் வர வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இதைவிட அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் எண்ணப்படுகின்றது . இதனால் மாநாடு தொடர்பாக 21 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று காவல்துறை தமிழக வெற்றிக் கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள். இதற்கு பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தி இருந்தார்.

மாநாடு குறித்து சொன்னது:

இந்த நிலையில் மாநாடு தொடர்பாக காவல்துறையினர் கேட்ட 21 கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பதில் மனுவும் புஸ்ஸி ஆனந்த் அனுப்பியிருக்கிறார். அந்த மனுவில், மாநாட்டில் 50,000 இருக்கைகள் போடப்பட்டிருக்கிறது. ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவருக்கும் தனித்தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. தமிழகம் மட்டுமில்லாமல், கேரளா, கர்நாடக, ஆந்திரா என்று மற்ற மாநிலங்களில் இருந்துமே தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள். மதியம் 12 மணி முதல் இரவு 10:00 மணி வரை மாநாடு நடைபெறும். மாலை 6:00 மணியிலிருந்து தான் விஜய் பேச இருக்கிறார். அதோடு, எந்த அரசியல் கட்சி தலைவரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், போலீஸ் அனுமதி கிடைத்தவுடன் மாநாடு ஏற்பாடுகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது .

Advertisement