மூன்று கொடி ரெடி GOATகாக காத்திருக்கும் விஜய் – த.வெ.கவின் அடுத்த கட்ட திட்டம்

0
345
- Advertisement -

தமிழ்நாட்டில் என்றென்றும் இளைய தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் தோல்வியை அடைந்தாலும் படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகனாக விஜய் திகழ்ந்து கொண்டிருக்கிறார் ‌ இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் விஜய் அவர்கள் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்திருந்தார்.

-விளம்பரம்-

இதனால் நிர்வாகிகள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் உற்சாகமடைந்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற ஆலோசனை கூட்டத்தில் விஜய் கூறியிருந்தார். இதற்காக புதிய செயலையும் உருவாக்கி உறுப்பினர் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார்.

- Advertisement -

விஜய் அரசியல்:

அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு இறந்த குடும்பங்களை விதை நேரில் சந்தித்து தன்னால் முடிந்த உதவிகளை செய்திருந்தார். அதற்குப் பின் கடந்த மாதம் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் வகையில் கல்வி விழா ஏற்பாடு செய்திருந்தார்.

கல்வி விருது விழா:

இந்த விழாவை இரண்டு கட்டமாக விஜய் நடத்தி மாணவர்களுடன் கலந்துரையாடி பரிசும் அளித்திருந்தார். இதை அடுத்து விஜயின் உடைய முதல் அரசியல் மாநாடு எப்போது? என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் விஜயின் முதல் மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் தான் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இது குறித்து தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனிடையில் , கட்சி தொடங்கியதற்கு பிறகு தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

-விளம்பரம்-

கட்சி கொடி குறித்து :

கட்சியின் கொடி எப்போது அறிவிப்பார்கள் என்று தொண்டர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போதே அதற்கான பணிகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்கள். ஏற்கனவே ஒரு கொடியை தேர்வு செய்து விஜயிடம் காட்டினார்களாம். அந்த கொடி விஜய்க்கு அதிருப்தியாக இருந்ததாக தெரிகிறது. அதனால் மாற்று கொடியை தயார் செய்யுங்கள் என்று விஜய் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், தற்போது நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழக’ம் கட்சிக்காக மூன்று கோடிகள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக தெரிகிறது.

விரைவில் அறிவிப்பு வெளியாகும்:

அந்த மூன்று கொடியிலிருந்து ஒன்றை விஜய் தேர்ந்தெடுப்பார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கட்சி குறித்து எந்த ஒரு தகவலாக இருந்தாலும் தலைவர் விஜய் தான் அறிவிப்பார் என ஏற்கனவே தெரிவித்த நிலையில், கட்சியின் கொடியை குறித்தும் அவரே அறிவிப்பார் என்று தெரிவித்து வருகிறார்கள். ஆனால், வரும் செப்டம்பர் மாதம்5 ஆம் தேதி விஜய் நடித்திருக்கும் ‘கோட்’ திரைப்படம் வெளியாகும் நிலையில், அதற்குப் பிறகு தான் ‘தமிழக வெற்றி கழகம் கட்சியின் கொடி குறித்தும், முதல் மாநாடு குறித்தும் தகவல்கள் வெளியாகும் என கூறுகிறார்கள். அதேபோல், மாநாடு நடத்துவதற்கான இடமும் தற்போது வரை தீர்மானம் செய்யவில்லை என்று கூறுகிறார்கள்.

Advertisement