பெண்களின் பாதுகாப்பு நிலை குறித்து விஜய் எழுதிய கடிதத்தை அனுமதி இல்லாமல் விநியோகம் செய்ததாக தவெக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைதாகி இருக்கும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சோசியல் மீடியா முழுவதும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதுமே பல அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் குரல் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக விஜய் அவர்கள் இன்று கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டு இருந்தார். அதோடு சட்டம்- ஒழுங்கு உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து விஜய் மனு ஒன்றை அளித்து இருந்தார் .
விஜய் எழுதிய கடிதம்:
மேலும், விஜய் எழுதிய கடிதத்தில், எல்லா சூழ்நிலைகளிலும் நிச்சயமாக உங்களுடன் நான் அண்ணனாகவும், அரனாகவும் உறுதியாக நிற்பேன். எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம் என்று கூறியிருந்தார். இந்த கடிதத்தினுடைய நகல்களை தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் பொதுமக்களுக்கு கொடுத்திருந்தார்கள். பின் அந்த கடிதத்தை தனியார் மகளிர் கல்லூரிக்கு கொடுத்தார்கள். ஆனால், அங்கு கொடுக்கக் கூடாது என்று காவலர்கள் தடுத்து நிறுத்தி இருந்தார்கள்.
கழகப் பொது செயலாளரை கைது செய்த காவல்துறை இதுவரைக்கும் எந்த ஒரு நியூஸ்ல வரலை 😡
— RamKumarr (@ramk8060) December 30, 2024
வன்மையாக கண்டிக்கிறோம் pic.twitter.com/8XsKON3eeD
புஸ்ஸி ஆனந்த் கைது:
இதனால் கட்சி தொண்டர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கட்சி தொண்டர்களை போலீஸ் கைது செய்து இருக்கிறார்கள். உடனே அவர்களைப் பார்ப்பதற்கு தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்று இருந்தார். அவரையும் போலீஸ் கைது செய்து இருக்கிறார்கள். தற்போது இதை கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
விஜய் அரசியல்:
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தான் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் தன் கட்சியின் பெயரை விஜய் அறிவித்திருந்தார். அதோடு வருகின்ற 2006 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிடுவதாக விஜய் அறிவித்திருந்தார். பின் விஜய் தன் கட்சி கொடியை ஏற்றி உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலை பாடி இருந்தார். அந்த கட்சி கொடியில் வாகை மலரும், இரு பக்கம் யானையும் இருந்தது.
முதல் மாநாடு:
அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, வி.சாலையில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தனது முதல் அரசியல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார் தலைவர் விஜய். இந்த மாநாட்டில் முழு அரசியல் தலைவனாக விஜய் பேசியிருந்தது பலரையுமே மெய்மறக்க வைத்தது. அதோடு இந்த மாநாட்டிற்கு இலட்சக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் திரண்டு வந்திருந்தார்கள். அதன் பின் தன் கட்சி பணியில் விஜய் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்