தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய படைப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. தற்போது விஜய் அரசியலில் இறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். வருகிற 2026 ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் விஜய் அறிவித்திருந்தார். இவருடைய பேச்சு முழு அரசியல்வாதியாக இருக்கிறது என்று பலரும் பாராட்டிருந்தார்கள்.

இதை அடுத்து சில தினங்களுக்கு முன்பு தான் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை கட்சி தொண்டர்கள், உறுப்பினர்கள் எல்லோருமே கொண்டாடி இருந்தார்கள்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட அளவில் கழக செயல்வீரர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த விழாவில் விஜய், நம்ம சின்னம் விசில், உங்க சின்னம் விசில், வெற்றி சின்னம் விசில், கப்பு முக்கியம் பிகிலு என்று கூறி விசில் அடித்து தன்னுடைய கட்சி சின்னத்தை அறிவித்திருக்கிறார்.
விஜய் அரசியல்:
பின் விழாவில் பேசிய விஜய், நாம் அரசியல் பயணத்தில் மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். ஏன் இவ்வளவு அழுத்தமாக சொல்கிறேன் என்றால், ஏதாவது அழுத்தம் இருக்குன்னு நினைக்கிறீங்களா? அழுத்தமா? நமக்கா? இந்த அழுத்தத்திற்கெல்லாம் அடங்கி போற ஆளா இந்த ஆளு. இந்த முகத்தைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது. அதெல்லாம் நடக்காது அதுவும் முக்கியமா நம்மகிட்ட அது நடக்கவே நடக்காது. அழுத்தம் இருக்கிறது நமக்கு இல்ல, மக்களுக்கு தான். தமிழ்நாட்டை இதற்கு முன்பு ஆண்டவர்களும் சரி, இப்போது ஆளுபவர்களையும் சரி பாஜகவிற்கு அடிமையாக தான் இருந்தார்கள். அவர்களை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை.

ஆலோசனை கூட்டம்:
மக்கள் நமக்காக உண்மையாக உழைப்பவர்கள் யாராவது வர மாட்டார்களா? என்று அழுத்தத்தில் இருக்கிறார்கள். தவெக விஜய் கூட நிற்பார் என்று மக்கள் நம்புகிறார்கள். அப்படின்னா இது முக்கியமான காலகட்டம் தான். விஜய் இப்பதான் வந்திருக்காரு, அவர் வர மாட்டாங்க, இவங்க வர மாட்டாங்கன்னு தேவையில்லாத பேச்சுகள் போய்க் கொண்டிருக்கிறது. மக்கள் மக்கள் ரொம்ப அக்கறையா, தீர்க்கமா நமக்கான ஒரு இடத்தை கொடுத்திருக்கிறார்கள். என் கேரியரின் உச்சத்தையே கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் ஒருவராக என்னை நம்பி அந்த இடத்தை கொடுத்திருக்கிறார்கள். ஒரு நல்ல அன்போடு நம்மளை அரவணைத்து இருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=ahJXeXx9T1c
விஜய்யின் வாக்கு:
அதற்காக உழைத்து உழைத்து இப்போது அதுவே என்னுடைய ஒரிஜினல் கேரக்டராக மாறிவிட்டது. ஒன்னே ஒன்னு சொல்கிறேன்,
இதற்கு முன்னாடி இருந்தவர்கள் மாதிரியும் இப்ப இருப்பவர்கள் மாதிரியும் ஊழல் செய்யவே மாட்டோம்.
ஊழல் செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது. எனக்கு ஒரு பைசா கூட தேவையில்லை. அதை தொட வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு துளி ஊழல் கரையும் படியவே விடமாட்டோம். இது என்ன முதல்வன் படமா? ஒரே நாளில் வந்து இவர் சுத்தம் பண்ணிடுவாரான்னு? நீங்க கேட்கலாம். ஆனால், அது ஒரு ப்ராசஸ். அது கொஞ்ச நேரம் எடுக்கும். எதுக்கும் ஆசைப்படாதவன் கண் முன்னாடி ஊழல் நடந்தால் அதை பார்த்துட்டு அவன் சும்மா இருக்க மாட்டான் என்று கூறி இருக்கிறார்.






