கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியா ஹாட் டாபிக்கே சிஎம் விஜய் தான். இவர் அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடந்த தேர்தலில் 85 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக அறிவித்திருந்தார்கள். பின் தேர்தலின் முடிவில் எல்லா கட்சியையும் தவெக கட்சி கதி கலங்க வைத்தது. தமிழகத்தில் 108 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் தவெக கட்சி இருந்தது. இதை அடுத்து பிரபலங்கள், நடிகர்கள், ரசிகர்கள், அதிகாரிகள் என பலருமே விஜய்க்கு வாழ்த்துக்களை கூறி வந்தார்கள். இதை அடுத்து பெரும்பான்மையாக 144 எம் எல் ஏக்கள் பெற்று விஜய் அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்றார்.

பதவி ஏற்றவுடன் விஜய் அவர்கள் செம மாஸாக பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார். மேலும் விஜய் அவர்கள் பதவி ஏற்ற அன்றைக்கு அவருடன் ஒன்பது அமைச்சர்களும் பதவி ஏற்று இருந்தார்கள். இதனை அடுத்து சில தினங்களுக்கு முன்புதான் அவர்களுக்கான துறைகளும் முதல்வர் விஜய் அவர்கள் ஒதுக்கீடு செய்தார். இப்படி இருக்கும் நிலையில் இன்று 21 தவெக எம்எல்ஏகள் அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார்கள். அதில் இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர் அவையில் இடம் கிடைத்திருக்கிறது.
விஜய் வெற்றி:
இதில் அவிநாசி தொகுதியில் போட்டியிட்டு வென்ற கமலியும் அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். இவரைப் பற்றிய செய்தி தான் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலா மணி, அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டவர் பாஜக வேட்பாளர் இந்திய மத்திய இணை அமைச்சர் எல் முருகன். இவர்களுக்கிடையில் தான் கடுமையான போட்டி நிலவும் என்று அந்த பகுதியில் பேசப்பட்டது.
கமலி குறித்த தகவல்:
இந்த இரண்டு வேட்பாளர்களுக்கு மத்தியில் நீயா நானா என்ற அளவுக்கு யுத்தம் நடந்தது. அந்த சமயத்தில் தான் சத்தமே இல்லாமல் மூன்றாவதாக நின்றவர் தவெக வேட்பாளர் கமலி. தேர்தலில் முடிவில் இருவரையும் பின்னுக்கு தள்ளி அவிநாசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு வாகையும் சூடி அனைவருக்குமே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஆழ்த்தி இருந்தவர் கமலி. தற்போது இவர் தவெக எம்எல்ஏவாக அவிநாசி தொகுதியில் பணியாற்றி வருகிறார். இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர். இவருக்கு 28 வயது தான் ஆகிறது.

எம்எல்ஏ to மினிஸ்டர்:
இவருடைய கணவர் இ சேவை மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இல்லத்தரசியாக தான் இவர் தன்னுடைய குடும்பத்தை கவனித்து வந்திருந்தார். கமலி முதுகலை பட்டதாரி. அரசியலின் மீது இவருக்கு ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக தான் தவெக-வில் இணைத்து செயல்பட்டு வந்தார். அவிநாசி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. முதல் முதலாக தேர்தலில் போட்டியிட்டார். 15000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக, பாஜக எல்.முருகனைத் தோற்கடித்தார். அதோடு எம்எல்ஏவாக இவர் பொறுப்பேற்ற போது கூட அவருடைய எளிமையை பார்த்து பலருமே ஆச்சரியப்பட்டார்கள். பேட்டியில் கூட இவர், நான் எளிமையான குடும்பத்திலிருந்து பிறந்து வளர்ந்ததால் தான் கஷ்டங்களை நன்கு உணர்ந்திருக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=-AR0xytkzGk
கமலி சொன்னது:
அந்த வலியை இனி யாருக்கும் தந்து விடக்கூடாது என்று கொள்கையுடன் செயல்பட விரும்புகிறேன். அவிநாசி தொகுதியை பொருத்தவரை பல அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது. அதனை மாற்ற என்னால் முடிந்த முயற்சிகள் செய்வேன் என்று சொன்னார். அவிநாசி எம்எல்ஏ அலுவலகம் திறப்பு விழாவில் கமலி அவர்கள் எந்த ஒரு தலைகணமும் இல்லாமல் கோலம் போட்டு இருந்தார். இவர் எம்எல்ஏவாக பொறுப்பேற்றவுடன் உயர் கல்வி படிக்க போதிய வசதி இல்லாத மாணவி தர்ஷினிக்கு இந்துஸ்தான் கல்லூரியில் படிக்க ஏற்பாடு செய்து இருந்தார். கமலியின் எளிமையையும்
சேவையையும் பாராட்டி வருகிறார்கள்.



