ஷர்மிகாவின் டிப்ஸ்ஸை பாலோ செய்ததால் ஏற்பட்ட பாதிப்பு – மேலும், இருவர் திடீர் புகார்.

0
299
- Advertisement -

சித்த மருத்துவர் ஷர்மிகா மீது இரண்டு பேர் புகார் அளித்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாக சோசியல் மீடியாவில் டாக்டர் ஷர்மிகா குறித்த சர்ச்சைகள் வைரல் ஆகி வருகிறது. தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவராக மருத்துவர் டெய்சி சரண் இருக்கிறார். இவருடைய மகள் தான் ஷர்மிக்கா. இவர் சித்த மருத்துவராக தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

-விளம்பரம்-

இவர் சென்னையில் உள்ள தனியார் சித்த மருத்துவ கல்லுரியில் பி.எஸ்.எம்.எஸ் என்ற மருத்துவ படிப்பை படித்து இருக்கிறார். பின் சென்னை அருகம்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமணையில் சித்தமருத்துவர் என பதிவு செய்து இருக்கிறார். இவர் தனியாக யூடுயூப் சேனல் ஒன்று தொடங்கி அதில் இவர் மருத்துவ குறிப்பு வீடியோக்களை எல்லாம் பதிவிட்டு வருகிறார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். அதோடு இவர் பல சேனல்களுக்கு பேட்டியும் அளித்து இருக்கிறார்.

- Advertisement -

சித்த மருத்துவர் ஷர்மிகா:

இதுகுறித்து பல சர்ச்சைகளும் சோசியல் மீடியாவில் எழுந்திருக்கிறது. இவருடைய மருத்துவ குறிப்புகளை குறித்து பலரும் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். அதிலும், தினமும் நான்கு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும். ஒரு குலோப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் மூன்று கிலோ எடை கூடும். பெண்கள் கவிழ்ந்து படுத்தால் மார்பக புற்றுநோய் உண்டாகும். பெண்கள் நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும் போன்ற சர்ச்சை கருத்துக்களை பேசியிருந்தார்.

ஷர்மிகா குறித்த சர்ச்சை:

இப்படி எளிய குறிப்புகளை மக்களுக்கு கொடுப்பதன் மூலம் எக்கச்சக்க தில்லாலங்கடி வேலைகளையும் ஷர்மிகா செய்திருக்கிறார். இதனால் சில மாதங்களாகவே மீம்ஸ் கிரியேட்டர்கள் டாக்டர் ஷர்மிகாவை வைத்து பயங்கரமாக சோசியல் மீடியாவில் விமர்சித்து வந்தார்கள். அதுமட்டுமில்லாமல் சர்மிளா தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார் என்று குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்கள். அந்த வகையில் அவர் பேசிய சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதை அடிப்படையாகக் கொண்டு அவர் மீது தவறான தகவல் பரப்புவதாக புகார் எழுந்திருக்கிறது.

-விளம்பரம்-

ஷர்மிகா மீது மீண்டும் புகார்:

இதனை தொடர்ந்து ஷர்மிகா தான் கூறிய கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ பதிவிட்டு இருந்தார். மேலும், இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழுவின் முன்பு ஆஜராகி விளக்கமும் அளித்தார் ஷர்மிகா. இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்திய மருத்துவ ஆணையத்தில் ஷர்மிகா மீது இரண்டு பேர் புகார் அளித்திருக்கிறார்கள். அதில், ஷர்மிகாவின் மருத்துவ குறிப்புகளை பின்பற்றியதால் பாதிப்பு அடைந்து இருப்பதாக புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே புகாரின் அடிப்படையில் சர்மிகாவின் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Advertisement