திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த சீரியல் நடிகை. சரமாறியாக கத்தியால் குத்திய தயாரிப்பாளர்.

0
1739
malvi
- Advertisement -

திருமணத்திற்கு மறுத்ததால் சீரியல் நடிகை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த மால்வி மல்ஹோத்ரா சீரியல்கள் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். குமாரி 18 ப்ளஸ்’ என்னும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் மால்வி மல்ஹோத்ரா. இதன்பின் நிறைய தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இந்தியில் ஹோட்டல் மாலினி என்றொரு படத்தில் நடித்துள்ளார். இவருக்கென்று சின்னத்திரையில் ஒரு தனி ரசிகர் பட்டாளமும் இருக்கிறது.

-விளம்பரம்-

சினிமா தயாரிப்பு தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் யோகேஷ் குமாருடன் மால்விக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி பலமுறை சந்தித்து பேசியுள்ளனர். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று யோகேஷ் குமார் நடிகை மால்வியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் நடிகை மால்வி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதன்பின் யோகேஷ் குமாரிடம் பேச்சுவார்தையும் குறைத்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தயாரிப்பாளர், நேற்று இரவு 10 மணி அளவில் நடிகை மால்வி மும்பையில் உள்ள ஒரு கபேயில் இருந்து காரில் வீட்டுக்கு செல்லும்போது கத்தியால் குத்தியுள்ளார்.

- Advertisement -

நடிகை மால்வி மல்ஹோத்ராவை கத்தியை எடுத்து நடிகையின் வயிற்றிலும், கைகளிலும் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார் யோகேஷ். இதையடுத்து படுகாயம் அடைந்த நடிகை மால்வி மல்ஹோத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நான்கு முறை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். தயாரிப்பாளர் என்று கூறப்படும் மகிபால் சிங்கை நடிகை நன்கு அறிந்து உள்ளார். 2019 ஆம் ஆண்டு சமூக ஊடகம் மூலம் இருவரும் பழக்கமாகி உள்ளனர்.மகிபால் மல்கோத்ராவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி வலியுறுத்தி வந்து உள்ளார்.

சமீபத்தில் நடிகை குற்றம் சாட்டப்பட்டவருடன் அனைத்து வகையான தகவல்தொடர்புகளையும் துண்டித்து கொண்டார்.நடிகை மால்வி தாக்கப்பட்டது குறித்து பல்வேறு தரப்பினரும் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர் இப்படி ஒரு நிலையில் இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்திருக்கும் நடிகை கங்கணா ரனாவத், இச்சம்பவத்தில் குற்றம் செய்தவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும், நடிகை மால்வியுடன் நான் இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement