இணையத்தில் சர்ச்சையான தன் மகன் தோழியுடன் இருக்கும் புகைப்படம் – முதன் முறையாக பதிலடி கொடுத்த உதயநிதி.

0
524
udhay
- Advertisement -

ஒரே சமயத்தில் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகலாக இருந்து வருகிறார. குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் ஆதவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நான்கு படங்களை தயாரித்த பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார் உதயநிதி ஸ்டாலின். தனது முதல் படமே அமோக வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார் உதயநிதி.

-விளம்பரம்-

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படமும் மாபெரும் வெற்றி பெற்றது. உதயநிதி ஸ்டாலின் கடந்த 2002ஆம் ஆண்டு கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கிருத்திகா மற்றும் உதயநிதி ஸ்டாலின்னுக்கு இன்பநிதி என்ற மகனும் தமன்யா என்ற மகளும் உள்ளனர். இறுதியாக நடந்த சட்ட மன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று தற்போது அந்த தொகுதியில் எண்ணெற்ற நலத்திட்டங்களை செய்து அசத்தி வருகிறார்.

- Advertisement -

அதே போல சமீபத்தில் தான் உதயநிதிக்கு விளையாட்டை துறை அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டது. தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட திட்டமிட்டு இருக்கும் உதயநிதி ‘மாமன்னன்’ படத்தோடு சினிமாவில் நடிப்பதை நிறுத்தப்போவதாகவும் அறிவித்து இருந்தார். அவரது மகனோ ஸ்போர்ட்ஸ்ஸில் அசத்தி வருகிறார். உதயநிதியின் மகன், ஒரு கால்பந்து வீரர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் நெரோகா எஃப்சி (North East Reorganising Cultural Association (Neroca)) என்ற கால்பந்து அணிக்குத் தமிழகத்திலிருந்து உதயநிதியின் மகன் தேர்வாகி இருந்தார்.

இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். உதயநிதி அமைச்சர் ஆனதில் இருந்தே அவரது மகன் இன்பநிதியும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். இப்படி ஒரு நிலையில் இன்பநிதி தனது தோழியுடன் இருக்கும் சில புகைப்படங்கள் சமூக வளைதளத்தில் வைரலாகியது . இதனை திமுகவிற்கு எதிரானவர்கள் அதிகம் பகிர்ந்து கேலி செய்து வந்தனர்.

-விளம்பரம்-

அதே போல அரசியல் வாதி மகனுக்கு தோழி இருக்க கூடாதா என்ன என்று இன்பநிதிக்கு ஆதரவாக பலர் பதிவிட்டு வந்தனர். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற உதயநிதியிடம் மகனின் இந்த சர்ச்சை குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த உதயநிதி ‘அவருக்கு 18 வயது ஆகிவிட்டது அவர் இப்போது ஒரு அடல்ட் அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை ஒரு பெற்றோராக எனக்கும் என்னுடைய மனைவிக்கும் என் மகனுக்கும் இருக்கும் விஷயத்தை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை.

ஆனால் இந்த குடும்பத்திலும் இப்படி ஒரு அரசியல் பின்னணியில் இருப்பதினால் இது மாதிரியான குற்றச்சாட்டுகள் வரத்தான் செய்யும். அதை கையாளுவதற்கு முதிர்ச்சி இருந்தால் அவர் அதை சமாளிக்க வேண்டும். இருப்பினும் அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை, என்னுடைய எல்லைக்கு மேல் நானே அதில் தலையிட விரும்பவில்லை அது அவருக்கான சுதந்திரம்’ என்று படு கூலாக பதில் அளித்துள்ளார்.

Advertisement