விஜய்க்கும் எனக்கும் சின்ன கருத்து வேறுபாடு இருந்தது உண்மைதான். அதற்கு காரணம் இதுதான் என்று உதயநிதி ஸ்டாலின் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார்.
இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ் , நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் ரஞ்சிதமே என்ற முதல் பாடல் வெளியாகி இருந்தது. ஆனால், இந்த பாடல் குறித்தும், விஜய் நடனம் குறித்தும் இணையத்தில் பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது.
வாரிசு படம்:
மேலும், இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை 7ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வாங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருந்தது. படத்திற்கான வியாபாரம் மற்றும் பிரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், சில இடங்களில் வாரிசு படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம்:
ஏற்கனவே, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் அஜித் நடித்திருக்கும் துணிவு படத்தை தமிழகத்தில் பல திரையரங்களில் வெளியிட இருக்கிறது. இதனால் வாரிசு படத்திற்கு திரையரங்கம் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம், வாரிசு திரைப்படத்தை தெலுங்கு மொழியில் வெளியிடக் கூடாது என்று பிரச்சனை செய்கிறார்கள். பொங்கல் பண்டிகை முன்னிட்டு தெலுங்கு மொழியின் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக இருப்பதால் டப்பிங் படத்தை வெளியிட தடை என்று கூறியிருக்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி:
இதனால் வாரிசு தெலுங்கில் வெளியாகுமா? என்று தெரியவில்லை. ஆனால், இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் உதயநிதி ஸ்டாலின் தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி ஒன்று அளித்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் விஜய்க்கும்,உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே இருக்கும் பிரச்சனை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவரிடம் உங்களுக்கும் விஜய்க்கும் இருக்கும் பிரச்சனை குறித்து கூறுங்கள் என்று கேட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் சொன்னது, எப்போதும் போல தான் நாங்கள் டிஸ்டன்ஸ் மெயின்டன் பண்ணிக் கொண்டிருக்கிறோம்.
விஜய்-உதயநிதி சண்டை:
பொதுவாகவே விஜய் அண்ணா எல்லோரிடமும் அவ்வளவு சீக்கிரமாக நெருங்கி பழக மாட்டார். அப்படி நெருங்கி பழகிய விட்டால் பிரிய மாட்டார். ஆரம்பத்தில் விஜய் அண்ணா அப்படித்தான் என்னிடம் இருந்தார். யாரோ ஒருவர் எங்கள் இருவருக்கும் தேவையில்லாமல் பிரச்சனை கிளப்பி விட்டார்கள். நான் சொன்னதாக அவரிடமும், அவர் சொன்னதாக என்னிடமும் பொய்யான தகவலை பரப்பி இருந்தார்கள். இதனால் நானும், விஜய் அண்ணாவும் பேசாமல் இருந்தோம். பின் நானே அவரிடம் போய் அது குறித்து பேசிய உடன் பிரச்சனை முடிந்தது. இருந்தாலும், நாங்கள் இருவரும் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணி தான் இருக்கிறோம். பங்க்ஷன், முக்கியமான நாள் என்றால் பேசிக் கொள்வோம். கடைசியாக நான் அவரை புத்தாண்டு அன்று தான் சந்தித்து பேசி இருந்தேன் என்று கூறியிருந்தார்.