என் மகன் துவண்டு போனால் இதை தான் செய்வான் – மேடையில் தன் மகன் குறித்து பேசிய உதயநிதி.

0
366
- Advertisement -

ஒரே சமயத்தில் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகலாக இருந்து வருகிறார. குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் ஆதவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நான்கு படங்களை தயாரித்த பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார் உதயநிதி ஸ்டாலின். தனது முதல் படமே அமோக வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார் உதயநிதி.

-விளம்பரம்-

ஆனால் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பின்னர் ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க மிகவும் தடுமாறினார் உதயநிதி ஸ்டாலின். இடையில் இவரது நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதேபோல கண்ணேகலைமானே சைக்கோ போன்ற படங்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல வெற்றியை கொடுத்திருந்தது. இறுதியாக இவர் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

- Advertisement -

உதயநிதி ஸ்டாலின் கடந்த 2002ஆம் ஆண்டு கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கிருத்திகா மற்றும் உதயநிதி ஸ்டாலின்னுக்கு இன்பநிதி என்ற மகனும் தமன்யா என்ற மகளும் உள்ளனர். இறுதியாக நடந்த சட்ட மன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று தற்போது அந்த தொகுதியில் எண்ணெற்ற நலத்திட்டங்களை செய்து அசத்தி வருகிறார். அதே போல சமீபத்தில் தான் உதயநிதிக்கு விளையாட்டை துறை அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டது.

இப்படி ஒரு நிலையில் இன்பநிதி தனது தோழியுடன் இருக்கும் சில புகைப்படங்கள் கடந்த மாதம் சமூக வளைதளத்தில் வைரலாகி வந்தது. இதனை திமுகவிற்கு எதிரானவர்கள் அதிகம் பகிர்ந்து கேலி செய்து வந்தனர். அதே போல அரசியல் வாதி மகனுக்கு தோழி இருக்க கூடாதா என்ன என்று இன்பநிதிக்கு ஆதரவாக பலர் பதிவிட்டு வந்தனர். இப்படி ஒரு நிலையில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் 8-வது மற்றும் 25-வது தேசிய அளவிலான செவித்திறன் குன்றியவர்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான துவக்கவிழாவில் கலந்து கொண்டார்.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து மாநிலங்களுக்கு இடையேயான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை சென்னையில் தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘ என்னுடைய மகனை அறிமுகம் செய்த போது அவர் ஒரு கால்பந்து வீரர் என்று சொன்னார்கள் ஆனால் அவர் டேபிள் டென்னிசன் ஆடுவார் என்னுடைய வீட்டில் ஒரு டேபிள் டென்னிஸ் கோர்ட் இருக்கிறது ஆனால் அதில் நான் அடிக்கடி விளையாட மாட்டேன் எப்போதெல்லாம் இன்பநதி துவண்டு போய் இருக்கிறாரோ அப்போது என்னுடன் விளையாட அவர் அழைப்பார்.

அப்போதுதான் என்னை தோற்கடிக்க செய்து அவர் கொஞ்சம் உற்சாகமடைந்து கொள்வார்’ என்று பேசி இருக்கிறார். உதயநிதியின் இந்த வீடியோவிற்கு கீழ் இன்பநிதி தோழியுடன் இருந்த புகைப்படங்கள் குறித்து பலரும் கமன்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே இந்த சர்ச்சை வெடித்த பொது உதயநிதியின் மனைவி கிருத்திகா தனது ட்விட்டர் பக்கத்தில் ”காதலிப்பதற்கு அதை வெளிப்படுத்துவதற்கும் எப்போதும் பயப்பட கூடாது. இயற்கையை அதன் முழு மகிமையில் புரிந்துகொள்வதற்கான வழிகளில் இதுவும் ஒன்றாகும்’ என்று பதிவிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement