விஜய் கட்சி கொடி மற்றும் கட்சிப் பாடல் குறித்த கேள்வி – உதயநிதி கொடுத்த பல்ப் பதில்

0
459
- Advertisement -

விஜய் கட்சி கொடி மற்றும் கட்சிப் பாடல் குறித்த கேள்விக்கு, செய்தியாளர்களிடம் உதயநிதி கொடுத்த பதில் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். பல போராட்டங்களுக்குப் பிறகுதான் இவர் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்று சில ஆண்டுகளாகவே கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் தான் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று விஜய், தன் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். இதனால் நிர்வாகிகள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் உற்சாகமடைந்து விட்டார்கள். அது மட்டும் இல்லாமல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று புதிய செயலியையும் உருவாக்கி உறுப்பினர் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார்.

- Advertisement -

விஜய் அரசியல்:

அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஆகஸ்ட் 22 ஆம் தேதி அறிமுகப்படுத்துவதாக கூறி இருந்தார். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலுமே கொடி ஏற்றும் விழா நடைபெறும் என்று கூறப்பட்டது. அதோடு சில தினங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை பறக்கவிட்டு ஒத்திகை பார்த்திருந்தார். இதனால் சோசியல் மீடியா முழுவதும் விஜயின் கட்சி கொடி குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு இருந்தது.

தவெக கொடியேற்றும் விழா:

இந்நிலையில், பிரம்மாண்டமாக கொடி ஏற்றும் விழாவை நடத்த போலீசார் அனுமதி கொடுக்க மறுத்ததால், விஜய் தன் கட்சி அலுவலகத்தில் 250-300 பேரை மட்டும் வைத்து கட்சி கொடியை ஏற்ற முடிவு செய்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் சமீபத்தில் கொடி ஏற்றும் விழா குறித்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் குறிப்பிட்டது போல், இன்று ஆகஸ்ட் 22, 2024 கொடியேற்றும் விழா சிறப்பாக நடந்தது. கொடி ஏற்றுவதற்கு முன்பு விஜய், தவெக தொண்டர்களுடன் சேர்ந்து கட்சிக்காக உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

-விளம்பரம்-

செய்தியாளர்கள் கேள்வி:

அதற்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் பாடலும் வெளியிடப்பட்டது. அந்தப் பாடலில், ‘தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது’ என்பது போல் வரிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல், ‘அரசை கேள்வி கேட்கும், தளபதியின் காலம் இது’ போன்ற வலிமையான வரிகளை இப்பாடல் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள், விஜயின் கட்சிக் கொடி மற்றும் கட்சிப் பாடல் குறித்த கேள்விகள் எழுப்பினர்.

உதயநிதி ஸ்டாலின் பதில்:

அதற்கு அவர், நாங்கள் வேறு ஒரு நிகழ்ச்சியில் இருந்தோம். இன்னும் நான் விஜயின் கொடி மற்றும் பாடலை பார்க்கவில்லை. நான் பார்த்துட்டு சொல்றேன் என்று கூறியுள்ளார். பிறகு, செய்தியாளர் விஜய்க்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறி காரில் ஏறி கிளம்பியுள்ளார். தற்போது உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement