தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருந்தவர் உதயநிதி ஸ்டாலின். ஆதவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் ஹீரோவாக களம் இறங்கி பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இவர் சினிமாவில் இருந்து விலகி திமுகவில் புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று இருக்கிறார்.
இந்த நிலையில் சென்னை காவல்துறை சார்பில் போதை பொருள் பழக்கத்திற்கு எதிரான ஒரு சிறப்பு நடவடிக்கையாக போதை பொருள் விழிப்புணர்வு ஆவண திரைப்பட போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 300க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களுடைய ஆவண குறும்படத்தை தயாரித்திருந்தனர். அவர்களில் முதல் மூன்று பேருக்கு விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
உதயநிதி பேசியது :
அந்த விழாவிற்கு தொகுப்பாளராக இயக்குனர் விக்னேஷ் சிவம் மற்றும் சிறப்பு விருந்தினராக சென்னை மாநகர காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்களோடு அமைச்சர் ஸ்டாலின் அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். இந்நிலையில் போதை பொருள் எதிர்ப்பிற்க்கான ஆவண திரைப்பட போட்டியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த விக்னேஷ் சிவனை கலாய்த்து பேசினார்.
ரெட் ஜென்ட்ஸ்ல் இருந்து விலகி விட்டேன் :
அவர் கூறியதாவது “இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடித்தி கொண்டிருக்கும் விக்னேஷ் செய்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். நான் சமீப காலமாக நான் எந்த சினிமா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை அதற்கான நேரமும் என்னிடம் இல்லை. அதே போல ரெட் ஜென்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து நான் விலகிவிட்டேன். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான காரணம் போதை பொருளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கில் இந்த விழா நடைபெறுவதினாலும், காவல் துறை என்னிடம் கேட்டுக்கொண்டதினாலும் வந்தேன்.
விக்னேஷ் சிவனை கலாய்த்த ஸ்டாலின் :
கடந்த ஆண்டு உலகமக்கள் அனைவரும் வியந்து பாராட்டும் வகையில் சென்னையில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது விக்னேஷ் சிவம் குழு தான் இந்த நிகழ்ச்சியையும் நடத்துகிறது. ஆனால் விக்னேஷ் சிவனை எப்படி இந்த நிகழ்ச்சிக்கு தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை. ஏனெற்றால் அவருடைய படங்களின் பெயர்கள் காத்து வாக்குல ரெண்டு காதல், நானும் ரவுடிதான் என்று இருக்கிறது. ஆனாலும் அவர் இந்த நிகழ்ச்சிக்காக சிறப்பாக நடத்தி வருகிறார் என்று கூறினார்.
வாட்ஸ் ஆப் :
மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின் சிங்கம் 1,2,3 எனவும் சாமி 1,2,3 எனவும் படம் வருகிறது ஆனால் உண்மையாக காவல் துறைதான் தமிழாநாட்டை காக்கின்ற சிங்கங்களாகவும், சாமிகளாகவும் இருக்கின்றனர். தற்போது வாட்ஸ் ஆப் காலம் என்பதினால் அவற்றில் வருவதை நம்பி அப்படியே ஷேர் செய்து விடுகிறோம். அதனால் பல சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது எனவே நல்லது எது, உண்மையான தகவல் எது என்பதை ஆராய்ந்து அதனை பகிர வேண்டும் என்று தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.