லோகேஷ் பொத்தி பொத்தி வைத்த ரகசியத்தை போட்டுடைத்த உதய் – லியோ படம் குறித்து என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
1460
- Advertisement -

லியோ படம் குறித்து உதயநிதி பதிவிட்டு இருக்கும் டீவ்ட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த அப்டேட்டுகள் தான் வைரலாகி கொண்டு வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக நடத்த வேண்டாம் என படக்குழு முடிவெடுத்திருந்ததாக கூறப்பட்டது.

- Advertisement -

லியோ படம்:

இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும், லியோ ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் படம் ரிலீசாக சில தினங்கள் இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும், ஆரவாரமும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் படத்திற்கான ப்ரீ புக்கிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை லியோ படத்திற்கு இந்தியா, வெளிநாடுகளிலும் முன் பதிவு டிக்கெட் கோடி கணக்கில் விற்று இருப்பதாக கூறப்படுகிறது.

அரசாங்க உத்தரவு:

மேலும், தமிழகம் முழுவதும் லியோ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டிருக்கிறது. அதோடு ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் திரையிட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அனைத்து திரையரங்களிலும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே காட்சிகள் திரையிடப்படும் என்று அறிவித்திருக்கிறது. ஆனால், லியோ படத்திற்கு ஸ்பெசல் ஷோ அனுமதிக்கப்பட வேண்டும் என்று படக்குழு சார்பாக நீதிமன்றத்தில் கோரிக்கை மனு வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், நாளை படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கான வேலைகளை படக்குழு தொடங்கி இருந்தார்கள்.

-விளம்பரம்-

ஆனால், நீதிமன்றம் 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்றும் ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகளுக்கு மேல் திரையிடக்கூடாது என்றும் உத்தரவு போட்டிருந்தார்கள். இது திரையரங்கு உரிமையாளர்களுக்கு மட்டுமில்லாமல் படக்குவினர்களுக்கும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. இந்த பிரச்சினை காரணமாக சென்னையில் முக்கிய திரையரங்களில் டிக்கெட் முன்பதிவு நடைபெறவில்லை. ஆக மொத்தம், தமிழகத்தில் மட்டும் லியோ படம் ஒன்பது மணிக்கு வெளியாக இருக்கிறது. கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் அதிகாலை நான்கு மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

உதயநிதி டீவ்ட்:

இதனால் தமிழ் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் லியோ படத்தை பார்த்துவிட்டு டீவ்ட் ஒன்று செய்திருக்கிறார். அதில் அவர், லியோ ஒரு சிறந்த படம். லோகேஷ் கனகராஜ், அன்பறிவு, அனிருத், விஜய் ஆகியோருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். எல் சி யூ என்ற ஹாஸ்டேக் பதிவிட்டு இருக்கிறது. லியோ படம் LCU வா இல்லையா என்று லோகேஷ் கனகராஜ் பொத்தி பொத்தி வைத்து இருந்த ரகசியத்தை இப்படி பொட்டென்று போட்டுடைத்துள்ளார் உதயநிதி

Advertisement