அதுக்கு ஏத்த மாதிரி படம் இருக்கனும்னு அப்பா சொன்னார் – நெஞ்சுக்கு நீதி குறித்து உதயநிதி

0
227
- Advertisement -

நெஞ்சுக்கு நீதி படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் குருவி படத்தின் மூலம் தான் தயாரிப்பாளராக சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். பின் ஆதவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி இருந்தார். அதை தொடர்ந்து இவர் நான்கு படங்களை தயாரித்து இருந்தார். பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் தான் உதயநிதி ஹீரோவாக களம் இறங்கி இருந்தார். மேலும், தனது முதல் படமே அமோக வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார் உதயநிதி.

-விளம்பரம்-

இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த கண்ணை நம்பாதே, சைக்கோ போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். இந்த படத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேல் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

- Advertisement -

நெஞ்சுக்கு நீதி படம்:

இதனைத் தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் தான்யா ரவிச்சந்திரன், சிவானி ராஜசேகர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்று இருந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயன், ஆர்யா, ஆர்ஜே பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது,

உதயநிதி அளித்த பேட்டி:

இந்த படத்திற்கு இந்த டைட்டில் வைக்கலாம் என்று தைரியம் கொடுத்து சாதித்துக் காட்டிய அருண் ராஜாவுக்கு நன்றி. ஒருநாள் இரவு போனி கபூர் சார் உங்களை சந்திக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். நான் உடனே, தலயை தானே அவர் பார்ப்பார், நம்மள எதுக்கு கூப்பிடுகிறார் என்று யோசித்தேன்.பிறகு அவரை சந்தித்த பிறகு நாங்கள் ரெண்டு பேரும் ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போ அவர் என்னிடம் ரீமேக் ரைட்ஸ் வாங்கிய மூணு படம் இருக்கு, அதில் இரண்டு காமெடி என்று சொன்னார். காமெடி படம் பண்ணி எனக்கு போரடித்துவிட்டது.

-விளம்பரம்-

படம் குறித்து உதயநிதி கூறியது:

சீரியசான படம் இருந்தால் சொல்லுங்கள் என்று சொன்னேன். அதற்கு பிறகு தான் நெஞ்சுக்கு நீதி படம் பண்ண நினைத்தோம். இதுவரையும் நான் போலீஸ் கதாபாத்திரம் பண்ணதே கிடையாது. இந்தப் படத்தை இயக்க பலரிடம் கேட்ட போது இந்த படம் ரொம்ப ஆபத்தானது என்றெல்லாம் சொல்லி இருந்தார்கள். அதன் பின் அருண் ராஜா இடம் கேட்டு படம் எடுக்க வேண்டும் என்று முடிவு பண்ணினேன். இந்தப்படம் உத்திரபிரதேசத்தில் நடந்த உண்மை சம்பவம். அங்கு இருக்கிற சூழல் வேறு,இங்கு சூழல் வேறு. உத்திரப் பிரதேசத்தை விட நாம் 30 வருஷம் முன்னாடி இருக்கிறோம். அதற்கு நம்முடைய திராவிட கழகம் காரணம். அதற்கப்பிறகு இந்த டைட்டில் பத்தி பேசும்போது என்னுடைய அப்பா கிட்ட பேசணும் என்று சொன்னேன். அப்பாவிடம் போய் கேட்டேன்.

படம் டைட்டில் குறித்து ஸ்டாலின் சொன்னது:

இந்த மாதிரி படம் பண்ணுகிறேன், தாத்தாவோட டைட்டில் நெஞ்சுக்கு நீதி வைக்கலாம் என்று சொன்னேன். அப்பா படத்துக்கு டைட்டில் நெஞ்சுக்கு நீதியா! என்று கேட்டார். தேசிய விருது பெற்ற படம், கனா இயக்குனர் இந்த படத்தை இயக்குகிறார் என்று சொன்னேன். சரிபார்த்து பண்ணுங்க தப்பா பண்ணிட கூடாது என்று அப்பா சொன்னார். அந்த பயத்தோட இந்த படத்தை ஆரம்பித்தோம். இந்த படம் செய்து கொண்டிருக்கும்போது அருணின் மனைவி இறந்தது பெரிய இழப்பு. இந்த படத்தின் வெற்றி அருண் மனைவி மட்டுமில்லாமல் இன்னும் மூன்று பேர் கொரோனவினால் இறந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த படம் சமர்ப்பணம் என்று கூறியிருந்தார்.

Advertisement