உதயநிதி ஸ்டாலின் மனைவி யார் என்று தெரியுமா ?

0
16061
Udhayanidhi-stalin

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் உதயநிதி ஸ்டாலின். இவருக்கு கிருத்திகா என்ற மனைவி இருக்கிறார். ஆனால் அந்த கிருத்திகா யார் தெரியுமா? தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

stalin

- Advertisement -

சென்னையில் பிறந்த கிருத்திகா லயோலா கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். லயோலா கல்லூரியில் விஸ்காம் முடித்துள்ளார் இவர். படிக்கும்போதே சில ஷார்ட் பிலிம் எடுத்துள்ளார் கிருத்திகா. 2013ல் வந்த வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகம் ஆனார் இவர்.

இந்த படத்தின் ரிலீசுக்கு முன்னர் 500 மரக்கன்றுகளை நட்டு சமூக சேவை செய்தவர். கிருத்திகா மற்றும் உதயநிதி ஸ்டாலின்னுக்கு இன்பன் என்ற மகனும் தமன்யா என்ற மகளும் உள்ளனர். இவருடைய மூத்த பையன் இன்பனுக்கு தற்போது 14 வயது ஆகிறது.

-விளம்பரம்-

krithika

சினிமாவை தவிர்த்து திருநங்கைகளுக்கு என ஒரு ஆல்பம் தயாரித்து வெளியிட்டார். Stand By Me என்ற இந்த ஆல்பம் சென்ற வருடம் காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆனது. இது தவிர திருங்கைகளுக்கு என ஷார்ட் பிலிம்கள் எடுத்துள்ளார். மேலும் அவர்கன் வாழ்க்கைக்காக பல முயற்சிகள் எடுக்க உள்ளதாக கூறியுள்ளார் கிருத்திகா.
stand by me

Stand_by_Me_a
தற்போது தனது இரண்டாவது படத்தினை இயக்கி வருகிறார் கிருத்திகா. படத்தின் பெயர் காளி. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, சுனைனா, அஞ்சலி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து தற்போது ரிலீஸுக்காக காத்திருக்கிறார் கிருத்திகா உதயநிதி.

Advertisement