உதயநிதியின் மகனை பாத்திருப்பீங்க, மகளை பார்த்துளீர்களா ? எப்படி வளந்துட்டார் பாருங்க.

0
3591
udhay
- Advertisement -

ஒரே சமயத்தில் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகலாக இருந்து வருகிறார் உதயநிதி. குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் ஆதவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நான்கு படங்களை தயாரித்த பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார் உதயநிதி ஸ்டாலின். தனது முதல் படமே அமோக வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார் உதயநிதி.

-விளம்பரம்-
May be an image of 13 people and people standing

ஆனால் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பின்னர் ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க மிகவும் தடுமாறினார் உதயநிதி ஸ்டாலின். இடையில் இவரது நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதேபோல கண்ணேகலைமானே சைக்கோ போன்ற படங்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல வெற்றியை கொடுத்திருந்தது.

- Advertisement -

தற்போது கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், கனா படத்தை இயக்கிய அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்து வருகிறார். . உதயநிதி ஸ்டாலின் கடந்த 2002ஆம் ஆண்டு கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

கிருத்திகா மற்றும் உதயநிதி ஸ்டாலின்னுக்கு இன்பநிதி என்ற மகனும் தமன்யா என்ற மகளும் உள்ளனர். இதில் இன்ப நிதி ஒரு தீவிர கால்பந்து விளையாட்டு வீரர். அதனால் அடிக்கடி அவர் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. ஆனால், உதயநிதி மகளின் புகைப்படம் அவ்வளவாக வெளியானது இல்லை. இந்த நிலையில் நேற்று துபாயில் நடைபெற்ற IPL இறுதி போட்டியை தனது மகன் மற்றும் மகளுடன் நேரில் கண்டு கழித்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் உதயநிதி.

-விளம்பரம்-
Advertisement