‘உதயநிதி ஸ்டாலின் எனும் நான்’ – அமைச்சராக பதவியேற்ற உதயநிதி. மாற்றப்பட்ட பெயர் பலகை. என்ன துறை தெரியுமா ?

0
352
udhay
- Advertisement -

திமுகவில் புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் குருவி படத்தின் மூலம் தான் தயாரிப்பாளராக சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பின் இவர் ஆதவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் ஹீரோவாக களம் இறங்கி பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளியாகியிருந்த படம் நெஞ்சுக்கு நீதி. படத்தில் முதன்முறையாக காவல் அதிகாரியாக உதயநிதி நடித்திருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. நெஞ்சுக்கு நீதி படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது உதயநிதி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘கலகத் தலைவன்’. இந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

உதயநிதி நடிக்கும் படங்கள்:

பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அரசியலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் மாமன்னன் மற்றும் கமல் தயாரிப்பில் உருவாகும் இன்னொரு படத்தில் மட்டும் தான் நடிக்க இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதற்கு பிறகு தான் முழுவதும் அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டின் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

உதயநிதிக்கு கிடைத்த பதவி:

அதாவது, முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவைப் பொறுப்பு கடந்த மே மாதமே நடந்தது. பின் ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் திமுக இளைஞரணி செயலாளரும், முதல்வர் மு க ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் பொறுப்பு வகிக்கப்படுகிறது. உதயநிதிக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை என்ற பிரிவுகளில் அமைச்சரவையில் பதவி ஒதுக்கலாம் என கூறப்பட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி அவர்கள் ஸ்டாலினுக்கு 56 வயதில் அமைச்சரவையில் இடம் அளித்தார். தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு 46 வயதிலேயே அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கிறது.

-விளம்பரம்-

குவியும் வாழ்த்துக்கள்:

இந்த நிகழ்வு ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் முதல்வர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பேரவை கட்சி தலைவர்கள், தலைமை செயலாளர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கு பெற்றிருந்தனர். ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் உதயநிதிக்கு செய்து வைத்திருந்தார். தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்று இருக்கிறார். இவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.

பதவியெற்றதும் அதிரடி முடிவு :

தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், பதவியில் பொறுப்பேற்றவுடன் உதயநிதி அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருந்தார். அதில் அவரிடம் சினிமாவில் நடிக்கப் போவது குறித்து கேட்டிருந்தார்கள். அதற்கு உதயநிதி கூறியிருந்தது, இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை. மாமன்னன் திரைப்படமே என்னுடைய கடைசி திரைப்படம். வாழ்த்துக்கள் சொல்லிய அனைவருக்குமே நன்றி என்று கூறி இருந்தார்.

Advertisement