நிச்சயம் செய்துவிட்டு கழட்டிவிட்டு சென்ற காதலி – திருமணம் குறித்து பேசி வெந்த புண்ணில் வேலை பாச்சிய நடிகர்.

0
633
vishal
- Advertisement -

விஷாலின் திருமணம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராகவும், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால். சினிமா தயாரிப்பாளர் ஜிகே ரெட்டி அவர்களின் மகன் தான் விஷால். நடிகர் விஷால் அவர்கள் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த செல்லமே என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். விஷால் நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இரும்புதிரை படத்திற்க்கு பின்னர் விஷால் நடிப்பில் வெளியான எந்த படங்களும் பெரிதாக வெற்றி பெறவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் அணி தான் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறது. அதோடு தமிழில் சினிமாவில் இவரை புரட்சி தளபதி என்ற பட்டப்பெயரை வைத்து தான் விஷாலை அழைக்கிறார்கள்.

- Advertisement -

விஷாலின் திரைப்பயணம்:

சமீபத்தில் விஷாலின் வீரமே வாகை சூடும் படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை து.பா. சரவணன் இயக்கி இருந்தார். இப்படத்தை விஷால் பிலிம் ப்ரோடக்சன் தயாரித்து இருந்தது. இவர்களுடன் இந்த படத்தில் டிம்பிள் ஹயாத்தி , யோகி பாபு, ரமணா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. இதனை அடுத்து விஷால் அவர்கள் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்கின்றனர்.

லத்தி படம்:

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தில் சுனைனா, சூரி, ரோபோ சங்கர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் விஷால் நடித்த லத்தி படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது. டீசர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தனர். மேலும், சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். அப்போது மேடையில் உதயநிதி, விஷால் இருவரும் ஜாலியாக பேசி இருந்தார்கள். அதில் பள்ளி,காலேஜ் சென்றது தொடங்கி இப்போதும் கிரிக்கெட் விளையாடுவது வரை பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

விழாவில் உதய்-விஷால் கூறியது:

பின் நடிகர் சங்க கட்டிடம் பற்றி விஷால் பேசும்போது, அதில் கலைஞர் ஐயா மற்றும் ஸ்டாலின் பெயர் வரவேண்டும் என முன்பே அவர்களிடம் சொன்னேன். அது விரைவில் நிறைவேறப்போகிறது என்று பேசிக் கொண்டிருக்கும்போதே உதயநிதி ஸ்டாலின் குறுக்கிட்டு அந்த கட்டிடத்தை கொஞ்சம் சீக்கிரமாக கட்டி முடியுங்கள். கல்யாணம் பண்ணாம இவன் ஏமாற்றி கொண்டே இருக்கிறான் என்று கிண்டலாகப் பேசி இருக்கிறார். இப்படி இவர்கள் பேசிய வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஷாலின் திருமணம் குறித்த தகவல்:

ஏற்கனவே நடிகர் விஷால் அவர்கள் அனிஷா என்பவரை காதலித்து இருந்தார். இவர்களுடைய நிச்சயதார்த்தமும் பிரம்மாண்டமாக ஹைதராபாத்தில் நடைபெற்றிருந்தது. இது அனைவருக்கும் தெரிந்ததே. கூடிய விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று விஷால் திருமணம் நின்று விட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு விஷால் தன்னுடைய திருமணத்தில் ஆர்வம் காட்டவில்லை. கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால்.

Advertisement