‘சைக்கோ 2’ பற்றிய அறிவிப்பை வெளியிட்ட நடிகர். மிஷ்கினும் ஆசைப்படுகிறாராம்.

0
1424
psycho
- Advertisement -

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி உள்ள படம் “சைக்கோ”. இந்த படத்தில் அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன், ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு இளைராஜா அவர்கள் இசை அமைத்து உள்ளார். பார்வையில்லாத மாற்றுத் திறனாளி கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து உள்ளார். மேலும், சைக்கோ திரைப்படம் விமர்சன ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் படக் குழுவின் சார்பில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்று சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், மிஸ்கின், நித்யா மேனன் உட்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் “சைக்கோ 2” படம் கண்டிப்பாக வரும் என்று சைக்கோ படத்தின் வெற்றி விழா சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார். இந்த சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கூறியது, ஹிட் படம் கொடுத்து மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. கடைசியாக நான் நடித்த 4 படங்களும் சரியாக போகவில்லை. இருந்தாலும் அந்த படங்கள் எதுவும் மோசமான விமர்சனங்களை பெறவில்லை.

- Advertisement -

இந்த படத்தின் வெற்றிக்கு முக்கியமான நபர்களுள் இசைஞானி இளையராஜா, பிசி ஸ்ரீராம், அதிதி ராவ் ஆகியோரும் முக்கியமானவர்கள். முதலில் நான் அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். இந்த படத்தில் எனக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்திருந்தார். எனக்கும் அவருக்கும் இரண்டு நாட்கள் தான் படபிடிப்பு இருந்தது. ஆனால், இரண்டு நாட்களில் எங்களுடைய காதல் கதையை அழகாக உருவாக்கி இருந்தார் இயக்குனர். உண்மைய சொல்லப்போனால் இந்த படத்தில் ராஜிக்கும், அதிதிக்கும் தான் நிறைய கெமிஸ்ட்ரி. அப்படியே காதல் கொண்டேன் படம் மாதிரி தான் இருந்தது. காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் தான் கடத்திக் கொண்டு செல்வார்.

கடைசியில் அவர் இறந்து விடுவார். ஆனால், படத்தின் நாயகி தனுஷ் தான். அப்படிப் பார்த்தால் இந்த படத்தின் நாயகன் ராஜ் தான். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக மிஸ்கின் சார் தேதிகள் கேட்டு இருந்தார். இல்லை என்றவுடன் ஒரு பத்திரிகையாளர் காட்சி சூட் செய்து படத்தை முடித்து விட்டார். அப்போதிலிருந்தே ‘சைக்கோ 2’ பண்ணுவோம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். கண்டிப்பாக பண்ணுவோம் என்று நானும் கூறினேன்.

-விளம்பரம்-

படத்தின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கும் போது பலரும் என் கண் தெரியாதவராக ஏன் நடிக்கிறீர்கள் என்று கேட்டார்கள். எனக்கு மிஸ்கின் சார் படத்தில் நடிக்க ஆசை. அது எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன் என்று கூறினேன். இந்த படத்தை பற்றி சொல்லவே வார்த்தைகள் இல்லை. என்னை விட மிகக் கடுமையாக உழைத்தவர் ராஜ் தான். இந்த படத்தின் வெற்றிக்கு மிஸ்கின் சாருக்கு நான் ரொம்ப கடமைப்பட்டு இருக்கிறேன். கண்டிப்பாக சைக்கோ 2 படம் நடக்கும் என நம்புகிறேன் என்று கூறி இறுதியாக பேச்சை முடித்தார்.

Advertisement