பொதுவா சலூன் கடைனா இப்படி தான் இருக்கும், அதனால் தான் நான் இப்படி ஆரம்பித்து இருக்கிறேன் – உடுமலைப்பேட்டை கௌசல்யா

0
229
kousalya
- Advertisement -

நடிகை பார்வதி மேனன் குறித்து ஆணவ படுகொலையில் பாதிக்கப்பட்ட கௌசல்யா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இன்ஜினியரிங் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஷங்கருக்கும், கௌசல்யாவிற்கும் காதல் ஏற்பட்டு இருந்தது. ஆனால், இவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சார்ந்தவர்கள் என்பதால் கவுசல்யாவின் குடும்பத்தில் அவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். பின் இருவருமே 2015 ஆம் ஆண்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.

-விளம்பரம்-

இதனால் ஆத்திரம் அடைந்த கௌசல்யாவின் பெற்றோர்கள் கூலிப்படை மூலம் இரண்டு பேரையுமே கொல்ல திட்டமிட்டு இருந்தனர். அதன் பின் 2016 ஆம் ஆண்டு உடுமலை பஸ் நிலையம் அருகில் பட்ட பகலில் சங்கரையும், கௌசல்யாவையும் கூலிப்படையினர் வெட்டி சாய்த்தனர். இதில் ஷங்கர் உயிர் இழந்தார். கௌசல்யா படு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். இந்த ஆணவ படுகொலை தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

கௌசல்யா அழகு நிலையம்:

தற்போது கோவையை அடுத்த வெள்ளலூரில் உடுமலைப்பேட்டையில் ஆணவ படுகொலையில் பாதிக்கப்பட்ட கவுசல்யா அவர்கள் அழகு நிலையம் ஒன்றை திறந்து வைத்திருக்கிறார். இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு நடிகை பார்வதி மேனன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். இந்நிலையில் இந்நிலையில் அழகு நிலையம் திறந்தது குறித்து கௌசல்யா பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, பொதுவாகவே எல்லா எல்லா பாலினத்தவருக்கும் ஏற்ற மாதிரி தனித்தனியாக தான் சலூன் கடை இருக்கும்.

கௌசல்யா அளித்த பேட்டி:

இதனால் நான் ஒரு சலூன் கடையை ஆரம்பிக்க வேண்டும் என்று ரொம்ப நாளாகவே யோசித்துக் கொண்டிருந்தேன். அதனால் தான் ஃபேமிலி சலூன் என்று பெயர் வைத்தேன். சலூன் கடை என்றால் வெறும் ஹேர்கட் பண்ணுவது மட்டும் இல்லாமல் பேசியல் ஆரம்பித்து ஒரு பியூட்டி பார்லரில் என்னவெல்லாம் பண்ணுவார்களோ அத்தனை வசதியும் இங்கு இருக்கிறது. மேலும், கடையை திறந்து வைக்க பார்வதி மேடம் வந்திருந்தார்கள். எனக்கு அவர்களை ரொம்ப பிடிக்கும்.

-விளம்பரம்-

பார்வதி குறித்து சொன்னது:

அவங்க பெயருக்கு பின்னால் இருந்த ஜாதி பெயரை நீக்கியதால் இன்னும் அதிகமாக பிடிக்க ஆரம்பித்தது. அவங்களோட உயிரே படம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தனிநம்பிக்கை ஊட்டும் படம். பார்வதி மேடம் எப்போதுமே சாதாரண கதையில் நடிக்க மாட்டார்கள். சமூகம் சார்ந்த படத்தில் மட்டும் தான் நடிப்பார்கள். என்னோட சலூன் கடையை திறக்கணும் என்று யோசித்தபோது உடனடியாக எனக்கு நினைவுக்கு வந்தது பார்வதி மேடம் தான். அதனால் தான் நியூஸ் மினிட் தன்யா மேடம் கிட்ட கேட்டேன். அவங்க தான் உடனடியாக பார்வதி மேடம் கிட்ட பேசி ஏற்பாடு பண்ணித் தந்தார்கள்.

பார்வதி செய்த செயல்:

இந்த மாதிரி கடைகள் திறந்து வைத்த நடிகைகள் பணம் வாங்குவார்கள். பார்வதி மேடம் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இங்கு வருவதற்கான பிளைட் டிக்கெட்டை கூட அவங்களோட செலவில் புக் பண்ணி கொண்டு வந்தார்கள். என் கையைப் பிடித்துக் கொண்டு தைரியமாக பண்ணுங்கள். தொழில் ரீதியாக முன்னேறி வந்து பல பெண்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாக இருக்கணும் என்று சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. அவங்க என் கையை ரொம்ப நேரம் கெட்டியாக பிடித்துக் கொண்டது எனக்கு ஒரு எனர்ஜியை தந்தது என்று பல விஷயங்களை கவுசல்யா பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement