ரசிகர்களை மிகவும் கவர்ந்த ‘உள்ளம் கொள்ளை போகுதடா’ சீரியல் இரண்டாவது சீசன். எப்போது ஒளிபரப்பாகிறது தெரியுமா?

0
1538
ullam
- Advertisement -

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் இருக்கிறது. ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன், புதுப்புது மாற்றங்களுடன் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். சினிமாவை விட சீரியல்கள் தான் மக்கள் மத்தியில் நெருக்கமாக உள்ளது. சீரியல்கள் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் என உலகில் உள்ள பல மொழிகளில் ஒளிபரப்பி வருகிறார்கள். மேலும், மிகப்பிரபலமான சீரியல்கள் பிறமொழிகளில் இருந்து மொழி மாற்றம் செய்தும் ஒளிபரப்பி வருகிறார்கள். அதோடு தமிழ் மொழியில் இருந்து பிற மொழிக்கும், பிற மொழியில் இருந்து தமிழுக்கும் பல சீரியல்கள் ரீமிக்ஸ் செய்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமான சீரியலில் ஒன்று தான் உள்ளம் கொள்ளை போகுதடா. இந்த சீரியல் ஹிந்தி மொழியில் இருந்து ரீமேக் செய்யப்பட்டது. இந்த சீரியலை டப் செய்யப்பட்டு பாலிமர் டிவியில் ஒளிபரப்பினார்கள். இந்த சீரியல் தமிழில் ஒளிபரப்பப்பட்ட போது இந்த சீரியலுக்கு ஒன்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சோசியல் மீடியாவில் உருவானது. மேலும், இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகளின் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. அதிக வயது வித்தியாசம் உடைய இருவர் திருமணம் செய்து கொண்டு அவர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் கதை தான் உள்ளம் கொள்ளை போகுதடா.

- Advertisement -

தன் குடும்பத்திற்காக கதாநாயகன், கதாநாயகி இருவரும் திருமணம் செய்யாமல் உழைக்கிறார்கள். பின் ஒரு கட்டத்தில் இவர்களுக்கு வயது அதிகமாகும்போது இவர்களுக்கும் ஒரு துணை வேண்டுமென்று இவர்களுடைய வீட்டார் திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள். இவர்கள் இருவருக்கிடையே வயது வித்தியாசம் இருந்தாலும் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள். பிறகு இவர்களுக்கு இடையே ஏற்படும் காதல், சண்டை என்று சீரியல் அழகாக செல்கிறது.

ullam kollai poguthada serial in tamil polimer tv ullam kollai poguthada : ullam  kollai poguthada serial in tamil polimer tv ullam kollai poguthada song  tamil ullam kollai poguthada dubbed – News18 Tamil

இந்த நிலையில் தற்போது உள்ளம் கொள்ளை போகுதடா சீரியலின் இரண்டாவது சீசன் வந்துள்ளது. நவம்பர் எட்டாம் தேதியில் இருந்து இரவு 8.30 மணிக்கு இந்த சீரியலை ஒளிபரப்ப இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை கேட்டு உள்ளம் கொள்ளை போகுதடா ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த சீரியலை குறித்து தங்களுடைய கருத்துக்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

Advertisement