எங்க கல்யாணம் முஸ்லீம் முறைப்படியும் நடக்கல இந்து முறைப்படியும் நடக்கல – 29 ஆண்டு கழித்து மனைவிக்கு ரியாஸ் கான் கொடுத்த சர்ப்ரைஸ்.

0
79108
riyaz
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் ரியாஸ்கான். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார். இவர் பெரும்பாலும் படங்களில் குணசித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்தில் தான் அதிகம் நடித்து வந்துள்ளார். பிறகு இவர் நடிகை உமாவை திருமணம் செய்து கொண்டார். உமா ரியாஸ்கான் அவர்கள் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நடிகையும் ஆவார். தற்போது ஒரு புதிய படத்திற்காக ரியாஸ் கான் அவர்கள் கடுமையான உடற்பயிற்சி செய்து வருகிறார்.

-விளம்பரம்-

நடிகர் ரியாஸ் கான், பிரபல நடிகை உமா ரியாஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாரிக் ஹாசன், சமந்த் ஹாசன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். இவருடைய மூத்த மகன் சாரிக் ஹாசன் தற்போது சினிமா படங்களில் நடித்து வருகிறார். உமா ரியாஸ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : அனைத்தும் விக்கி பெயரில் தான் – இப்போ புதிதாக இந்த பிசினஸ்ஸையும் காதலன் பெயரில் ஆரம்பித்துள்ள நயன்

- Advertisement -

இவர்கள் திருமணம் பற்றி ரியாஸ் கான் பேட்டி ஒன்றில் சொன்ன போது, என்னுடைய கல்யாணம் காதல் திருமணம். அதுமட்டுமில்லாமல் நாங்கள் inter-caste மேரேஜ். இதனால் இரு வீட்டிற்கும் மனஸ்தாபங்கள், கஷ்டங்கள் இருந்தது. நான் உமாவை கடத்திக் கொண்டு வந்து தான் திருமணம் செய்தேன் என்று கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு திருமண நாள் சென்றது. இதற்காக உமா ரியாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அப்போது ரியாஸ் கான் இந்து முறையில் உமா ரியாஸுக்கு தாலி கட்டினார். இதுகுறித்து சொன்ன ரியாஸ் கான், எங்கள் திருமணம் அவசரத்தில் நடந்ததால் இந்து முறைப்படியும் நடக்கல முஸ்லீம் முறைப்படியும் நடக்கல ரிஜிஸ்டர் மட்டும் பண்ணிக்கிட்டோம். இப்போ உங்கள் முன்னாள் தாலி கட்டியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement