தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் மனு ? சர்ச்சையை ஏற்படுத்திய பிரபலம்.

0
460
dhanush
- Advertisement -

தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்துக்கு காரணம் இதுதான் என்று பிரபலம் ஒருவர் போட்டிருக்கும் ட்வீட் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தனுஷ் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-
dhanush

இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும், தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா பரத நாட்டியத்தில் சிறந்தவர். இவர் 3 ,வை ராஜா வை போன்ற சில படங்களை இயக்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 2003 ஆம் ஆண்டு வெளியான விசில் படத்தில் நட்பே நட்பே என்ற பாடலையும் இவர் பாடியிருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் யாத்ரா , இளையமகன் லிங்கா ஆவார்.

- Advertisement -

தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து:

இப்படி ஒரு நிலையில் தாங்கள் பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தங்களின் 18 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையில் இருந்து இருவரும் பிரிவதாக பரஸ்பரமாக முடிவு செய்து இருப்பதாக அறிவித்து இருந்தார்கள். கடந்த ஆண்டு ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து தான் பேசிக் கொண்டிருந்தது.

விவாகரத்து குறித்த சர்ச்சை:

சோசியல் மீடியாவை ஓபன் பண்ணினாலே போதும் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து குறித்த கருத்துக்களும், வீடியோக்களும் தான் உலா வந்து கொண்டிருக்கின்றது. இதனை அடுத்து இவர்களை சேர்த்து வைக்க பலர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனாலும், பலன் இல்லை. மேலும், பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பிரபலமும், சென்சார் போர்டு உறுப்பினருமான உமைர் சந்து என்பவர் twitter பக்கத்தில் தனுஷ்- ஐஸ்வர்யாவின் விவாகரத்து குறித்து பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

உமைர் சந்து பதிவு:

அதில் அவர், தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் விவாகரத்து கோரி அதிகாரப்பூர்வமாக சென்னை சிவில் நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தனர். அதில் வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்து கொண்டு தனுஷ் ஐஸ்வர்யாவை ஏமாற்றிவிட்டார் என்று கூறப்படுகிறது. இவர்களின் விவாகரத்து குறித்த செய்திகள் அதிகமாக பேசப்பட்டு இருக்கும் நிலையில் இருவருக்கும் சில சமரச பேச்சுவார்த்தை நடந்ததாகவும், இருவரும் குழந்தைகளுக்காக மீண்டும் சேர போவதாகவும் கூறப்பட்டது. ஆனால், மீண்டும் இவர்கள் சேருவதற்கு வாய்ப்பு இல்லை.

dhanush

சர்ச்சையான பதிவு:

தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து சென்னை நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக மனு தாக்கல் செய்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. தற்போது இவரின் இந்த பதிவு மூலம் தனுஷ், ஐஸ்வர்யாவை வேறொரு பெண்ணுக்காக ஏமாற்றி இருக்கிறாரா? என்ற புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். இதனால் ரசிகர்கள் பலரும் கொந்தளித்து கமாண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு தனுஷ் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement