தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வந்தவர்கள் நாக சைதன்யா – சமந்தா. சமீப காலமாக இவர்களின் விவகாரத்து குறித்த செய்திகள் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளன. இவர்கள் இருவரும் பிரிந்து விட்டோம் என்று அதிகார பூர்வமாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இவர்களின் முடிவு ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை தந்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இவர்களின் விவாகரத்து விவகாரம் குறித்து பல சர்ச்சைக்கள் சோசியல் மீடியாவில் எழுந்து வருகின்றன.
இந்தநிலையில் , சென்சார் உறுப்பினரும், திரைப்பட விமர்சகருமான உமைர் சந்துவின் ட்வீட் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக சைதன்யாவின் தொல்லையால் திருமண உறவை சமந்தா இழந்ததாக உமைர் சந்து பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். திரைத்துறை தொடர்பாக பல தகவல்களை ட்விட்டாக பதிவிட்டு எப்போதும் பரபரப்பில் இருக்கும் உமைர் சந்துவின் சமந்தா தொடர்பான ட்வீட்தான் தற்போது வைரலாகியுள்ளது.
சமந்தா விவாகரத்து செய்தியை அறிவித்த போதே அவர் கருக்கலைப்பு செய்துவிட்டார் என்ற செய்தி இணையத்தில் வைரலானது. இதுகுறித்து ‘சகுந்தலம்’ படத்தின் தயாரிப்பாளர் நீலிமா சகுந்தலம் பேசிய போது படத்திற்காக நானும் என்னுடைய தந்தை குணசேகரும் சமந்தாவை சந்தித்தோம். அவருக்கு சகுந்தலம் படத்தின் கதை மிகவும் பிடித்துவிட்டது. ஆனால், படத்தை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க முடியுமா? என்று எங்களிடம் கேட்டார்.
நான் ஏன் என்று கேட்டதற்கு சமந்தா அவர்கள் நாங்கள் இந்த ஆண்டு குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம். தாயாக விரும்புவதற்கு தான் முன்னுரிமை நான் அளிப்பேன். குழந்தை பிறந்தால் அது தான் என் உலகம் ஆக இருக்கும் என்று கூறியிருந்தார். அதோடு சகுந்தலம் சரித்திர கதை அம்சத்தை கொண்டது. இதனால் இது முடிவடைய நீண்ட காலம் ஆகும் என்பதால் சமந்தா ஆரம்பத்திலேயே இந்த படத்தில் நடிக்க தயங்கினார்.
ஆனால், திட்டமிட்டபடி படத்தை முடித்து விடுவோம் என்று நாங்கள் சொன்ன பிறகு தான் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.இது தான் அவருடைய கடைசி படம் என்றும் அதற்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள இருப்பதாகவும் அறிவித்திருந்தார். இதனால் நாங்கள் ஓய்வெடுக்காமல் படத்தை விரைவாக முடிக்க முடிவு செய்தோம் என்று கூறினார்.
குழந்தை பெற்று கொள்ள திட்டமிட்ட பிறகு என்ன காரணத்தினால் இவர்கள் விவாகரத்து செய்தார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பவந்தனர். இதுவரையும் இவர்களின் விவாகரத்து குறித்த சரியான காரணம் வெளியாகவில்லை. இப்படி இருக்கையில் உமைர் சந்துவின் இப்படி ஒரு பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.