இயக்குனர் உமாபதி ராமையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் TN 2026. இந்த படத்தினுடைய கதையை பிரபல நடிகர் தம்பி ராமையா எழுதியிருக்கிறார். இவருடைய மகன் தான் உமாபதி ராமையா. இவர்தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் தம்பி ராமையா, எம்.எஸ். பாஸ்கர், நட்டி நடராஜ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

சமீபத்தில் இந்த படத்தினுடைய டீசர் வெளியிடப்பட்டது. இந்த படத்தினுடைய டீசர் காட்சிகள் நடிகர் விஜயின் அரசியல் வருகையை விமர்சித்து எடுக்கப்பட்டதாக சோசியல் மீடியாவில் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்களின் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருந்தார்கள். அப்போது படத்தின் இயக்குனர் உமாபதி ராமையா, இது யாருக்கும் எதிரான படம் கிடையாது.
tn 2026 படம்:
நாங்கள் அவமதிப்பதாக சொல்லப்படும் நபர் ஒரு சிங்கம். சிங்கத்தை யாராவது அவமதிக்க முடியுமா? இது வெறும் படம் மட்டும். படத்தை படமாக மட்டும் பாருங்கள். அரசியல் ஆக்காதீர்கள். நான் விஜயின் பெரிய ரசிகன். அவரைப் பார்த்து தான் நடனம் ஆட கற்றுக் கொண்டேன். தேவை இல்லாமல் சர்ச்சைகளை கிளப்பாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.

உமாபதி பேட்டி:
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். சினிமாவை தாண்டி விஜய் அரசியலில் இறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இவருடைய பேச்சு முழு அரசியல்வாதியாக இருக்கிறது என்று பலரும் பாராட்டிருந்தார்கள். இதை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு தான் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் வழங்கப்பட்டிருக்கிறது.

விஜய் அரசியல்:
இதை அடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதற்குப்பின் விஜய் தன்னுடைய கட்சி சார்பில் 234 தொகுதிகளும் நிற்கப்போகும் வேட்பாளர்களையும் அறிவித்திருந்தார்.
தமிழ்நாட்டில் தவெக தனித்து போட்டியிடுகிறது. விஜய் இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். மேலும், விஜய் அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்.






