அன்று அவமானப்பட்ட விஜய்.! ஆனால் இன்று தளபதி ரசிகர்களை புல்லரிக்க வைத்த வீடியோ..!

0
361
vijay

இளைய தளபதி விஜய் தமிழ் சினிமாவில் இன்று ஒரு முக்கிய நட்சத்திர நடிகராக விளங்கி வருகிறார். நடிகர் விஜய் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரின் துணையில் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும், இன்று தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் பிடித்திருக்கும் இடம் அவரது கடின உழைப்பால் கிடைத்தது என்பது தான் உண்மை.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் விஜய், முதன் முதலில் விஜயகாந்த்தின் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் அவரை தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகம் செய்த படம் ”நாளைய தீர்ப்பு” என்ற படம் தான்.

அதன் பின்னர் விஜய் நடித்த பல படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியடையவில்லை. பின்னர் 1996 ஆம் வெளியான ‘பூவே உனக்காக ‘ என்ற படம் தான் நடிகர் விஜய்க்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தனது சினிமா வாழக்கையில் இத்தனை ஆண்டுகளில் பல்வேறு தோல்வி படங்களை சந்தித்திருந்தாலும் தற்போது விஜய் தமிழ் சினிமாவில் ஒரு உச்சத்தில் இருக்கிறார்.

விஜய் சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் ஒரு சிலர், இவரெல்லாம் ஹீரோவா என்று கிண்டல் செய்தனர். ஆனால், தற்போது இவரை போன்ற ஒரு ஹீரோ தமிழ் சினிமாவில் வேறு யார் என்ற அளவிற்கு விஜய்யின் புகழ் கொடிகட்டி பறந்து வருகிறது. நடிகர் விஜய்யின் இத்தனை ஆண்டு கால சினிமா வாழ்க்கைக்கு சமர்ப்பணமாக விஜய் ரசிகர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ பதிவு.