காலா படத்தின் பரிதாபம்.! டிக்கெட் புக் செய்யப்படாமல் விரிச்சோடி கிடக்கும் தியேட்டர்கள்..!

0
1415
kaal ticket status

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்துள்ள ‘காலா’ படம் நேற்று(ஜூன் 7) வெளியானது. ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் வசூல் ரீதியாக சாதனை படைக்கவில்லை என்று ஒரு சில தரப்பினர் கூறி வருகின்றனர்.

kalarajini

பொதுவாக ரஜினி படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாகவே இருக்கும். மேலும், படம் வெளியான சில நாட்களுக்கு திரையரங்குகளில் டிக்கெட்முன்பதிவு செய்யப்பட்டுவிடும். சென்ற ஆண்டு ரஜினியின் ‘கபாலி’ படம் வெளியான போதும் ,அந்த படத்திற்கான ஒரு வாரத்திற்கு மேலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதனால் கபாலி படத்தின் டிக்கெட்டுகள் 2000 க்கு மேல் விற்கப்பட்டது.

ஆனால் ‘காலா’ படத்திற்கு அந்த மாதிரியான எந்த ஒரு டிமாண்டும் ஏற்படவில்லை என்பது போல தெரிகிறது . இந்த படம் வெளியாகி ஒரு நாள் மட்டுமே ஆனா நிலையில் பெரும்பாலான திரையரங்குகள் இன்று காலியாகத்தான் உள்ளது. மேலும் இந்த படத்திற்கான டிக்கெட்டுகலும் பெரும்பாலும் முன்பதிவு செய்யப்படமால் தான் இருக்கிறது. இதனால் திரையரங்குகளின் முன்பதிவு இனையதளமும் விரிச்சோடியே காணப்படுகிறது.

rajini

முக்கிய நகரமான சென்னையில் கூட காலா படத்தின் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படாமல் இருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் மோசமான படங்கள் கூட குறைந்தது 3 நாட்களுக்காவது முன்பதிவு செய்யப்பட்டிருக்கும் . ஆனால், ‘காலா’ படத்திற்கு இந்த நிலை ஏற்பட்டதின் மூலம், மக்கள் மத்தியில் ரஜினிக்கு மவுஸ் குறைந்து விட்டதா என்று பலரும் எண்ணுகின்றனர்.