பிரபல நடிகர் டெல்லி கணேஷ் குறித்து சுவாரசியமான தகவல்கள் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக முக்கியமான நடிகர்களில் டெல்லி கணேஷும் ஒருவர். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் 1944 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆவார். சிறு வயதில் இருந்தே படிப்பில் ஈடுபாடோடு இருந்த டெல்லி கணேஷ், நன்றாக படித்து 1964ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.
விமானப்படையில் பணியாற்ற டெல்லி கணேஷ் நடிகராக மாறியது ஒரு பெரிய கதை தான். அந்த காலகட்டத்தில் போரில் அடிபட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர்களுக்கு பொழுதுபோக்கு என்று எதுவுமே இல்லையாம். அப்போதுதான் முப்படைகளிலும் பணியாற்றியவர்கள் எல்லாம் சேர்ந்து அவர்களுக்காக நாடகங்கள் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். அப்போதுதான் டெல்லி கணேஷ் அவர்கள் தன்னுடைய சக அதிகாரிகள் போல மிமிக்ரி செய்ய ஆரம்பித்து இருக்கிறார்.
விமானப்படை – நடிகர்:
அப்படியே போர் வீரர்களுக்காக டெல்லி கணேஷ் நாடகத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். பிறகு டெல்லி கணேஷ் அவர்கள் திருமணத்திற்காக தமிழ்நாட்டுக்கு வந்தபோது இவர் நாடகங்களில் நடித்ததை கேள்விப்பட்டு, அவரை நண்பர் ஒருவர் காத்தாடி ராமன், கௌரி கல்யாணம் போன்ற நாடகங்களில் நடிக்க வைத்திருக்கிறார். அதில் சிறப்பாக நடித்ததால் தொடர்ந்து நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த உடனே, 1974 ஆம் ஆண்டு விமானப்படை வேலையை ராஜினாமா செய்து விட்டு, முழு நேர நடிகராக டெல்லி கணேஷ் மாறிவிட்டார்.
டெல்லி கணேஷ் என்ற பெயர்:
பின் தர்ஷன பாரத நாடக சபா என்கிற டெல்லி நாடக சபையில் இவர் ஒரு உறுப்பினராக இருந்தால் அங்கு நிறைய நாடகங்களில் இவர் நடித்திருக்கிறார். அந்த சபையில் இவர் இருந்ததால் அனைவரும் இவரை செல்லமாக டெல்லி கணேஷ் என்று அழைத்து இருக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் பாலச்சந்தர் இயக்கத்தில் இவர் 1977 ஆம் ஆண்டு ‘பட்டினப்பிரவேசம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆகியிருக்கிறார். முதலில் ஹீரோவாக நடித்த தொடங்கிய இவர், அடுத்த அடுத்த படங்களில் தான் ஹீரோவாக தான் நடிப்பேன் என்றில்லாமல், கிடைத்த கேரக்டர்களில் எல்லாம் சிறப்பாக நடித்திருக்கிறார்.
டெல்லி கணேஷ் திரைப்பயணம்:
அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரஜினி, கமல், சத்யராஜ், சிம்பு, விஜய், பிரபு, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்திருக்கிறார். அதோடு இவர் இதுவரை 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 50 வருடங்களுக்கு மேலாக இவர் இருந்திருக்கிறார். அதற்குப் பின் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.
டெல்லி கணேஷ் மறைவு:
பிரபலமான தொலைக்காட்சிகளான சன் டிவி, விஜய் டிவி என பல சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்திருக்கிறார். அதோடு இவர் குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் டப்பிங் கலைஞராகவும் பல படங்களில் பணியாற்று இருக்கிறார். தமிழக அரசு விருது, கலை மாமணி விருது போன்ற விருதுகளையும் இவர் வாங்கியுள்ளார். இப்படி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருந்த டெல்லி கணேஷ் நவம்பர் 9ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணியளவில் உடல் நலக் குறைவால் காலம் ஆகி இருக்கிறார். இவரின் இழப்பு பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது