தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அறியப்படும் நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒருவர். இவர் தமிழ் நாட்டின் முன்னணி ஒருவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, அஜித், விஜய், சரத் குமார், விஜய் சேதுபதி என பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார். மேலும் பிரபல நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவமும் பல வருடங்களாக காதலித்து வந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

இப்படியிருக்கும் போது திருமணமாகி வெறும் 4 மதங்களிலேயே வாடகை தாயின் மூலம் கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். இவர்கள் இரண்டு வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றது பல விமர்சனங்களுக்கு உள்ளாகி தமிழ்நாட்டு மருத்துவ அமைச்சர் வரை சென்றது. தற்போதுதான் இந்த பிரச்சனைகளில் இருந்து வெளியில் வந்த நயன்தாரா “கனெக்ட்” என்ற ஹாரர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதற்க்கு முன்னர் கூட 2015ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் "மாயா" என்ற ஹாரர் திரைப்படம் வெளியாகி பெரிய அளவில் ஹிட் அடித்து. இதனை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அஸ்வின் சரவணனுடன் கைகோர்த்துள்ளார் நடிகை நயன்தாரா. இப்படத்தினை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவத்தின் ரவுடி தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது. மேலும் பிருத்வி சந்திரசேகர் இசையமைத்து, மணிகண்டன் கிருஷ்ணமாச்சரியர் ஒளிப்பதிவாளராகவும், ரிச்சர்ட் கெவின் எடிட்டராகவும் பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் வினய் ராய், சத்யராஜ், ரோஹித் சுரேஷ் போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். மேலும் 2012ஆம் ஆண்டில் வெளியாக "வெல்கம் பேக் காந்தி" என்ற படத்தில் நடித்தியர்ந்த அனுபம் கெர் தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் "கனெக்ட்" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடக்க உள்ளார்.
https://www.youtube.com/watch?v=-Lv1WmPzGzI
இப்படம் கொரோன காலத்தில் பேயிடம் மாட்டிக்கொண்ட மகளை தாயான நயன்தாரா எப்படி காப்பாற்றுகிறார் என்ற வகையில் உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் முதல் சிங்கிளான "நான் வரைகிற வானம்" என்ற பாடல் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிரபல பாடகரான உன்னிகிருஷ்ணனும் தேசிய விருது வாங்கிய அவரது மகள் உத்ரா உன்னிகிருஷ்ணனும் இணைந்து படியுள்ளது இப்பாடலுக்கு மேலும் சிறப்பை கொடுத்துள்ளது.





