தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான பாடகர் உன்னி கிருஷ்ணன். இவர் திரைப்பட பாடகர் மட்டுமில்லாமல் கர்நாடக இசைக் கலைஞரும் ஆவார். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். தன்னுடைய 12 வயதிலேயே இவர் கர்நாடக சங்கீதத்தை முறையாகக் கற்றுக் கொண்டவர். பிறகு கல்லூரி படிப்பு முடிந்து 1987 ஆம் ஆண்டிலிருந்து 1994 ஆம் ஆண்டு வரை பாரிஸ் மிட்டாய் கம்பெனியில் ஒரு நிர்வாகியாக வேலை பார்த்து வந்தார். அதற்கு பிறகு ஒரு பாடகராக வேண்டும் என்று தன்னுடைய லட்சியத்திற்காக தொழில் வேலையை விட்டு இசைத் துறையில் நுழைந்தார்.

உன்னி கிருஷ்ணன் மனைவி

இவரை திரை உலகிற்கு அழைத்து வந்தவரே இசை புயல் ஏ ஆர் ரகுமான் தான். அவர் மூலம் தான் இவர் பாடகராக ஆனார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி இருக்கிறார். அதிலும் இவருடைய பக்தி பாடல்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. லக்ஷ்மன் சுருதி இசைக் குழுவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் ‘சென்னையில் திருவையாறு’ இசை மற்றும் நாட்டிய விழாவில் தொடர்ந்து பல வருடங்களுக்கு மேலாக உன்னி கிருஷ்ணன் பாடிக் கொண்டு வருகிறார்.

Advertisement

உன்னி கிருஷ்ணன் திரைப்பயணம்:

அதுமட்டுமில்லாமல் திரையில் இவர் பாடிய பாடல்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறது. இவருடைய இசை திறமைக்காக கலைமாமணி விருது, இசைப் பேரொளி, யுவபாரதி, இசைச் செல்வம், சங்கீத கலாசாரதி , சங்கீத சக்கரவர்த்தி என்ற பல விருதுகளை வாங்கியுள்ளார். இதனிடையே இவர் பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவருடைய மனைவி பிரியாவும் கேரளாவை சேர்ந்தவர். இவர் பரதநாட்டியம் மற்றும் மோகினி ஆட்டம் போன்றவற்றை முறையாக பயின்ற நடனக்கலைஞர் ஆவார். இவர்களுடைய திருமணம் 1994 ஆம் ஆண்டு நடைபெற்றது. மேலும், இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

உன்னி கிருஷ்ணன் குடும்பம்:

வாசுதேவ கிருஷ்ணன் என்ற மகனும் உத்ரா என்ற மகளும் உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா சைவம் படத்தில் வெளியான அழகு என்ற பாடலை பாடி இருக்கிறார். இந்த பாடலுக்கு தேசிய விருதையும் வாங்கி இருக்கிறார். அதற்குப் பிறகு உத்ரா அவர்கள் பிசாசு, தெறி, லக்ஷ்மி போன்ற படங்களிலும் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்கள் எல்லாமே ஹிட் லிஸ்டில் உள்ளது என்றே சொல்லலாம். அதே போல் உன்னிகிருஷ்ணன் தன்னுடைய முதல் பாடலின் போது தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருடைய மகன் வாசுதேவ் கிருஷ்ணா கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.

Advertisement

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் உன்னி:

அதோடு இவர் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பின் உறுப்பினராகவும், தமிழக கிரிக்கெட் சங்கத்தின் வாழ்க்கை உறுப்பினராகவும் இருக்கிறார். மேலும், வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் உன்னி கிருஷ்ணன் அவர்கள் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

Advertisement

உன்னி கிருஷ்ணன் மகள் :

இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவுகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இவர் நடுவராக பங்கேற்று வருகிறார். சினிமாவில் பாடியதை விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தான் உன்னிகிருஷ்ணன் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்று சொல்லலாம். இந்த நிலையில் உன்னிகிருஷ்ணன் அவருடைய மகள் உடைய க்யூட்டான வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

Advertisement