மீண்டும் எல்லையை மீறும் மஹத் – தொலைக்காட்சியில் வெளிவராத காட்சிகள்

0
215
Mahat Bigg Boss Houses

பிக் பாஸ் சீசன் ஒன்றை போல் பிக் பாஸ் சீசன் இரண்டு சிறப்பாக இல்லை என்ற கருத்து ரசிகர்களிடையே பரவலாக நிலவி வருகிறது.

பிக் பாஸ் வீட்டின் விதி முறைகளை பின்பற்றாத காரணத்திற்காக மஹத் அவர்கள் பிக் பாஸ் வீட்டின் சிறையில் அடைக்கப்பட்டார். வாரத்தின் முதல் நாளே இந்த சம்பவம் நடந்தேறியது, மூன்று நாட்களுக்கு பிறகு இன்று சிறையில் இருந்து விடுவிக்க படுகிறார்.

Mahat Bigg Bossசிறையில் இருந்து வந்த பிறகு அவர் மஞ்சள் அணியில் இணைகிறார். அதன் பிறகு நடந்த டாஸ்கில் மஹத் அணியினர் முதல் முறையாக வெற்றியடைகின்றனர். அதன் பிறகு மீண்டும் பல சண்டைகள் இன்று அரங்கேற உள்ளது. குறிப்பாக மஹத் மற்றும் சென்ட்ராயன் இருவருக்கும் சண்டை வலுவடைவதாக தெரிகிறது.

Mahat yashikaஇதனிடையே மீண்டும் மஹத் யாஷிகாவிடம் எல்லை மீறி நடப்பதாக தெரிகிறது. யாஷிகா இருக்கும் மெத்தையில் அவர் வந்து படுக்கிறார், அதன் பிறகு சிறிது நேரத்தில் யாஷிகாவின் மடியிலும் அவர் படுத்துவிடுகிறார்.

இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ரொமான்ஸ் செய்வதை அருகில் இருக்கும் வைஷ்ணவி பார்த்து கடுப்பாகிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் இது போன்ற செயல்களை மஹத் தவிர்ப்பது அவருக்கு நன்மை பயக்கும்.