‘நான் என்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றபோது’ – கர்ப்பமாக இருந்த போது ராம்சரண் செய்த விஷயம் குறித்து நெகிழ்ந்த அவரின் மனைவி.

0
189
- Advertisement -

ராம்சரண் குறித்து அவருடைய மனைவி உபாசனா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் ராம் சரண். இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். தந்தையைப் போலவே மகனும் டோலிவுட்டில் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறார். கடைசியாக நடிகர் ராம் சரண் அவர்கள் தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த RRR என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து ராம்சரண் அவர்கள் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

ராம்சரண் குடும்பம்:

சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இதனிடையே நடிகர் ராம்சரண் அவர்கள் 2012ஆம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. இருந்தாலும், இவர்களுக்கு குழந்தை இல்லை என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி கொண்டே தான் இருந்தார்கள்.

ராம்சரண்-உபாசனா குழந்தை:

பின் கடந்த ஆண்டு ராம்சரண் மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார்கள். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அதை தொடர்ந்து இவர்கள் குழந்தையின் பெயர் சூட்டும் விழாவை சிறப்பாக நடத்தி இருந்தார்கள். இதை உபாசனாவின் தாய் வீட்டிலேயே நடத்தி இருந்தார்கள். இவர்கள் தங்களுடைய மகளுக்கு க்ளின் காரா கொனிடேலா (Klin Kaara Konidela) என்ற பெயர் வைத்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

உபாசனா பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் உபாசனா கூறியிருப்பது, நான் கர்ப்பமாக இருந்த காலத்தில் ராம்சரண் என்னை ரொம்ப அன்பாக பார்த்துக் கொண்டார். உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் அவர் எனக்கு பக்கபலமாக இருந்தார். அந்த சமயத்தில் எனக்கு ஒரு நல்ல தெரபிஸ்ட் ஆகவும் அவர் இருந்தார். நான் என்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றபோது என்னுடனே அவர் அங்கு வந்து தங்கி என்னை பார்த்துக் கொண்டார்.

ராம்சரண் குறித்து சொன்னது:

கர்ப்ப காலத்தில் கணவருடைய ஆதரவு மனைவிக்கு ரொம்பவே அவசியம். அது எனக்கு நிறையவே ராம்சரண் கொடுத்தார். அதனால் தான் அந்த சமயத்தில் என்னால் அவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் சந்தோசமாக இருக்க முடிந்தது. இப்போது ராம்சரண் என் மீது வைத்து இருக்கும் அன்பை விட அவருடைய மகளின் மீது தான் அதிக அன்பு வைத்திருக்கிறார். சாப்பிடுவது, விளையாடுவது என்று கிளீன் காரா உடை அனைத்து செயல்களிலும் ராம்சரனின் சாயல் அப்படியே இருக்கிறது. அவள் அப்படியே அப்பா பிள்ளை என்று கூறியிருக்கிறார்.

Advertisement