இறந்துவிட்டதாக தவறான செய்தியை அனுப்பிய ஆர்த்தி- உறவினர்களை காரணம் காட்டிய ஆர்த்தி

0
2136
Aarthi
- Advertisement -

விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்த்தி .இப்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு பதிவுகளை இட்டு வருகிறார்.இதனால் நடிகை ஆர்த்தி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.
harathi
இந்நிலையில் நடிகை ஆர்த்தி விஜய் பற்றி தவறாக டுவிட் செய்துள்ளார். இதனால் ஆர்த்திக்கும் விஜய் ரசிகர்களுக்கும் மோதல் உருவாகியுள்ளது.

-விளம்பரம்-

ஆர்த்தி விஜய்யை பல்வேறு டுவிட்டுகளில் விமர்சித்துள்ளார். ஆர்த்தி ஒரு நடிகையாக இருந்து கொண்டு விஜய்யை விமர்சித்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

- Advertisement -

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டது அஜித்தால் எந்த தயாரிப்பாளருக்கும் நஷ்டம் இல்லை. ஆனால் உங்களை வைத்து படம் எடுத்தவர்கள் எங்கே போனார்கள் என்பது தெரியவில்லை என விஜய்யை ஆர்த்தி நேரடியாக விமசித்துள்ளார்.
susila
இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் ஆர்த்தியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகை ஆர்த்தி நேற்று மெர்சல் படத்தில் வந்த மருத்துவமனை காட்சி போல் டுவிட் செய்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தித்தியது.

இதையும் படிங்க: மெர்சல் மருத்துவமனை காட்சி போல் வீடியோ வெளியிட்ட ஆர்த்தி – எச்சரித்த விஜய் ரசிகர்கள்

-விளம்பரம்-

இப்போது அவர் பாடகி பி. சுசிலா உயிருடன் இருக்கும்போது அவர் இறந்துவிட்டதாக டுவிட்டிய நடிகை ஆர்த்தியை ரசிகர்கள் விளாசியுள்ளனர்.

இந்நிலையில் சுசிலா அமெரிக்காவில் நலமாக உள்ளதாகவும், வதந்தியை நம்ப வேண்டாம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
susila
நடிகை ஆர்த்தி அவசரப்பட்டுவிட்டார்.அவர் ட்விட்டரில் “இசை உலகின் கானக்குயில், கின்னஸ் சாதனையாளர் பி.சுசிலா அவர்கள் இறைவனடி சேர்தல், ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்திருந்தார்”

Advertisement