கமல் பற்றி நடிகை ஊர்வசி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வருடம் வருடம் இந்திய சினிமாவின் சிறந்த படைப்புகளை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசால் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இதை முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு தான் தொடங்கி இருந்தார்கள். தற்போது 71 ஆவது தேசிய திரைப்பட விருது விழா நடைபெற இருக்கிறது. இன்று 71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தேர்வு பட்டியலில் 332 படங்கள் பரிசிலக்கப்பட்டு இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட படங்களுக்கு தான் இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் சிறந்த நடிகராக ஜவான் படத்திற்காக ஷாருக்கான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 35 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஷாருக்கானுக்கு இதுதான் முதல் முறைதேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
71வது தேசியவிருது:
சிறந்த படமாக 12th பைல் படம் தேர்வு செய்யப்படுகிறது. சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி தேர்வாகி இருக்கிறார். மேலும், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி படத்தின் பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி பிரகாஷ் பெற்றிருக்கிறார். இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்தது வாத்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை பார்க்கிங் படம் பிடித்து இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=KiiuJj9ewb0
ஊர்வசிக்கு விருது:
அதோடு பார்க்கிங் படம் சிறந்த திரைக்கான விருதையும் பெற்றிருக்கிறது. பின் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் எம்.எஸ் பாஸ்கர் பெற்றிருக்கிறார். மொத்தம் மூன்று விருதுகளை பார்க்கிங் படம் பெற்று இருக்கிறது. அதன் பின் சிறந்த துணை நடிகர் பிரிவில் மலையாள நடிகர் விஜயராகவனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறந்த துணை நடிகை பிரிவில் ஊர்வசிக்கும் தேசிய விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பின் தேசிய திரைப்பட விருது குழுவை சராமரியாக கேள்வி கேட்டு நடிகை ஊர்வசி கேள்வி கேட்டு இருந்தார்.
ஊர்வசி பேட்டி:
இதை அடுத்து ஊர்வசி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது ஊர்வசி அளித்த பேட்டியில், மரியாதைக்குரிய நண்பர் கமல். அப்படி ஒரு நட்பு கிடைப்பது சினிமாவில் பெரிய விஷயம். அவர் திறமைக்கு மதிப்பு கொடுப்பவர். ஊர்வசி ஒரு கணிக்க முடியாத திறமையான நடிகை என்று சொன்னதால் மட்டுமே தமிழ் சினிமாவில் நான் கவனிக்க பட்டேன். அதுதான் உண்மை. தமிழில் சில படங்களில் நடித்த உடனே என்னை மலையாள சினிமாவுக்கு போக சொன்னது கமல் தான்.

கமல் பற்றி சொன்னது:
காதல் காட்சிகள், நெருக்கமான காட்சிகள் எல்லாம் உங்களுக்கு பிடிக்காது என்று எனக்கு தெரியும். நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறீர்கள். உங்களுக்கு தமிழ் செட்டாகாது. நீங்கள் மலையாளத்துக்கு போங்க. நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கலாம் என்று சொன்னார். அதற்கு பின்பு தான் மலையாளத்தில் கவனம் செலுத்தி நடிக்க தொடங்கினேன். நான் இப்போது மலையாள சினிமாவில் பிரபலமாக இருப்பதற்கும் அவர்தான் காரணம் என்று கூறியிருக்கிறார்.






